மேலும் செய்திகள்
டில்லி கார் குண்டுவெடிப்பு: மேலும் 4 பேரை கைது செய்தது என்ஐஏ
1 hour(s) ago | 2
மும்பை: மஹாராஷ்டிராவில் 400 அடி உயர பள்ளத்தாக்கிலிருந்து ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் 6 பேர் பலியானாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் ரெய்ஹாட் மாவட்டத்தில் உள்ள தம்ஹினி காட் பகுதியானது, ராய்காட் மற்றும் புனே மாவட்டங்களை இணைக்கும் அழகிய மலைப்பாதையாகும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.இங்கு சுற்றுலா சென்ற தார் எஸ்யூவி ஜீப் 400 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:இந்த விபத்து, கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அதிகாலையில் நடந்துள்ளது. காரில் சென்றவர்களின் தொடர்பை இழந்ததால், அவர்களின் பெற்றோர் இன்று காலையில் எங்களிடம் புகார் தெரிவித்தனர்.புகாரை தொடர்ந்து, மங்கான் போலீசார் இன்று காலை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினார்கள். அப்போது சாலையில் ஒரு வளைவில் உடைந்த பாதுகாப்புத் தடுப்புச் சுவரைக் கண்ட பிறகு, ஒரு ட்ரோனை அனுப்பி பார்த்ததில் பள்ளத்தாக்கில் ஒரு மரத்தில் ஜீப் சிக்கியிருப்பதைக் கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களின் மொபைல் போன்கள் தம்ஹினி காட்டில் கிடந்தன.அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில்,கடந்த நவம்பர் 17 ஆம் தேதி மாலையில், 18 முதல் 22 வயதுள்ள இளைஞர்கள் தார் எஸ்யூவி ஜீப்பில் புனேயிலிருந்து புறப்பட்டனர் என்று தெரியவந்துள்ளது.நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை, ஆனால் விபத்துக்கு வழிவகுத்த இடத்தில் ஜீப்பை ஒட்டியவர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.ராய்காட் போலீஸ் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களின் மீட்புக் குழு இன்று பிற்பகல் உடல்கள் மீட்டது, பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்.உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். மேலும் விரிவான விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.
1 hour(s) ago | 2