உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துர்கா பந்தலில் இயேசுவின் படம் வி.எச்.பி., எதிர்ப்பால் அகற்றம்

துர்கா பந்தலில் இயேசுவின் படம் வி.எச்.பி., எதிர்ப்பால் அகற்றம்

ராஞ்சி : ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், வாடிகன் சிட்டி சர்ச் வடிவில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலுக்கு வி.எச்.பி., எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அதில் வைக்கப்பட்டு இருந்த இயேசு படம் நீக்கப்பட்டு கிருஷ்ணர் படம் வைக்கப்பட்டுள்ளது. அம்மன் சிலை ஜார்க்கண்ட் தலை நகர் ராஞ்சியில், நவராத்திரியை மு ன்னிட்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டு களாக பந்தல் அமைத்து வரும், 'ஆர்.ஆர்.ஸ்போர்டிங் கிளப்' என்ற அமைப்பின் சார்பில், ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள, கிறிஸ்துவர்களின் தலைமையிடமாக போற்றப்படும் வாடிகன் சிட்டி சர்ச் வடிவத்தில் பந்தல் அமைக்கப்பட்டது. பந்தலுக்கு வெளியே ஐரோப்பிய பாணியிலான சிலைகள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டன. அதே போல் உள்ளே பிரதானமாக அம்மன் சிலை வைக்கப்பட்டது. எனினும், ஏசு கிறிஸ்துவின் படமும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, பந்தலில் இருந்து ஏசுவின் படம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக கிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டது. இது கு றித்து, 'ஆர்.ஆர்.ஸ்போர்டி ங் கிளப்'பை சேர்ந்த யாதவ் கூறுகையில், ''இங்கு மற்ற மதங்களுக்கு இடமில்லை எனில், ஹிந்து தேசம் என அறிவித்துவிட வேண்டியது தானே. வெளிநாட்டிற்கு செல்லும்போதெல் லாம் பிரதமர் மோடி , அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் செல்கிறார். தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவே இந்த பந்தலை அமைத்தோம். அதே சமயம் சனாதன தர்மத்தையும் வெளிப்படுத்தினோம்,'' என்றார். மதமாற்றம் வி.எச்.பி., செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், ''ஹிந் து மதத்தின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கிலேயே அந்த பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், மதமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் வாடிகன் சர்ச் பாணியில் பந் தல் அமைக்கப்பட்டது. '' உண்மையிலேயே அவர்களுக்கு மதசார்பின்மை மீது அதிக விருப்பம் இருந்தால், சர்ச் மற்றும் மதரசாக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் ஹிந்து கடவுள்களின் படங்களை வைக் கலாமே. அ தை அவர்கள் செய்வரா, '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை