உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகைக்கடை முதலீட்டு திட்டம்: மும்பையில் மிக பெரிய மோசடி

நகைக்கடை முதலீட்டு திட்டம்: மும்பையில் மிக பெரிய மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : மஹாராஷ்டிராவில், முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி பல நுாறு வாடிக்கையாளர்களிடம் பிரபல நகைக்கடை குழுமம், பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த நகைக்கடை குழுமம், 'டாரஸ்' கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஆறு கிளைகளுடன் மும்பையில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது.

வட்டியுடன் பணம்

இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்தனர். அந்த வகையில், 52 வாரங்களுக்கு பணம் முதலீடு செய்வோருக்கு, 6 சதவீத வட்டி அளிக்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. நுாற்றுக் கணக்கானோர் முதலீடு செய்தனர். பலருக்கு வட்டியுடன் பணம் திரும்ப வந்தது.இந்த நேரத்தில், நகைக்கடை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி தவுசிப் ரியாஸ் என்பவர், கடந்த ஏழு நாட்களுக்கு முன், 'யு டியூப்' ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 5ம் தேதிக்கு முன்னதாக முதலீடு செய்பவர்களுக்கு 11 சதவீத வட்டி அளிக்கப்படும் என தெரிவித்தார்.இதை தொடர்ந்து, 'டாரஸ்' நகைக்கடைகளில் பல நுாறு பேர் முதலீடுகளை குவித்தனர். கூலி வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள் போன்ற நடுத்தர ஏழை எளிய மக்கள் அதிக வருவாய்க்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தனர்.

வழக்குப்பதிவு

நேற்று முன்தினம் 'டாரஸ்' கடைகள் திறக்கப்படாததை பார்த்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடையின் இரண்டு இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரி, பொது மேலாளர், கடை பொறுப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், 'டாரஸ்' குழுமம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சில ஊழியர்களுடன் சேர்ந்து, தலைமை செயல் அதிகாரி மிகப் பெரிய மோசடி சதியை அரங்கேற்றி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தாதர் கிளை கடையில் 100க்கும் மேற்பட்டோர் நுழைந்து கடையை சூறையாடியதுடன், நகைகளை திருடி சென்றதாகவும், அவர்கள் தலைமை செயல் அதிகாரியின் ஆட்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 08, 2025 13:55

நல்லவேளை இது நடந்தது பாஜக கூட்டணியா ஆட்சி செய்கிற மகாராஷ்டிராவில். இங்கே நடந்திருந்தால்,... விடியல், திராவிடர், சார் மோர் என்று கூவியிருப்பார்கள். வட போச்சே


Yaro Oruvan
ஜன 08, 2025 09:39

செஞ்சவன் யாருன்னு தெரியுமா? மார்க்கம் அதாவது விடியல் கும்பல்ல பெர்மனெண்ட் அடிமைகள்


பேசும் தமிழன்
ஜன 08, 2025 09:03

மோசடி செய்தவர்.... தவுசிப் ரியாஸ் .....உங்கள் கூட்டாளி தான் ....பிஜேபி ஆள் அல்ல ... நேற்றைய டாஸ்மாக் வீரன் இன்னும் தெளியவில்லை போல் தெரிகிறது....அதனால் தான் அரைகுறை புரிதலுடன் முட்டு கொடுக்க வந்துட்டார் .


Duruvesan
ஜன 08, 2025 08:20

ஆட்சி வந்து ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ளே மோசடி ,இதுல விடியல் சார் பத்தி தீயமுக files கமெண்ட்ஸ்


R S BALA
ஜன 08, 2025 07:59

கற்பா இருந்தாலும் காசாயிருந்தாலும் இல்ல நட்பா இருந்தாலும் ஏமாத்தறவன் சுத்திக்கிட்டேதான் இருப்பான் உண்மையில் ஏமாத்துறவனுக்கு மூலதனமே ஏமாறுபவனின் பேராசைதான் இந்த பேராசை பலருக்கு குறையப்போவதுமில்லை ஏமாற்றுக்காரர்கள் ஓயப்போவதுமில்லை..


VENKATASUBRAMANIAN
ஜன 08, 2025 07:52

மக்கள் திருந்தவே மாட்டார்கள். அதிக ஆசை இப்படித்தான்.


Kalyanaraman
ஜன 08, 2025 07:28

முதலீடு செய்த ஆயிரக்கணக்கான நபர்கள் EOWவில் புகார் அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருவதற்கே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிடும். விசாரணை தீர்ப்பு என்று 30-40 வருடம் ஆகும். இது தான் நம் பெருமைமிகு பாரதத்தின் சட்டங்கள். நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் குற்றவாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் குற்றங்களை பெருக்குவதற்குமே இருக்கிறது. நமது நாட்டின் முக்கால்வாசி வளர்ச்சியை தடுப்பது இந்த சட்டங்களும் நீதிமன்றங்களும் தான் என்றால் மிகை இல்லை.


Kasimani Baskaran
ஜன 08, 2025 05:54

தங்கத்தில் விலை 10% க்கு மேல் உயர்ந்தால் எப்படி பழைய விலைக்கு தங்கம் கொடுக்க முடியும் - அதனால்தான் தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள்.


புதிய வீடியோ