உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க அரசுக்கு ஜார்க்கண்ட் கடும் எதிர்ப்பு

மேற்கு வங்க அரசுக்கு ஜார்க்கண்ட் கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: மேற்கு வங்கத்தில் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்ய, அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட், வினியோகத்தை உடனடியாக தொடரும்படி கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 35 - 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கட்டுப்பாடுஉள்ளூர் சந்தையில் விலையை கட்டுப்படுத்த, அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்ய, சில கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்தது. மாநில எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், உருளைக்கிழங்கை ஏற்றி வரும் லாரிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.ஜார்க்கண்டின் உருளைக்கிழங்கு தேவையை, அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்கம் 60 சதவீதம் பூர்த்தி செய்கிறது. தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஜார்க்கண்டில் உருளைக்கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.கடந்த இரு நாட்களில், ஜார்க்கண்டின் சில்லரை சந்தைகளில் உருளைக்கிழங்கின் விலை, கிலோவுக்கு 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.ஜார்க்கண்டிற்கு உருளைக்கிழங்கு வினியோகத்தை மேற்கு வங்க அரசு நிறுத்தியதை அறிந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், இது குறித்து மேற்கு வங்க அரசுடன் உடனடியாக பேசி தீர்வு காணும்படி, தலைமை செயலர் அல்கா திவாரிக்கு உத்தரவிட்டார். இதன்படி, மேற்கு வங்க தலைமை செயலர் மனோஜ் பந்துடன், தொலைபேசியில் ஜார்க்கண்ட் தலைமை செயலர் அல்கா திவாரி பேசினார். அப்போது, உருளைக்கிழங்கு வினியோக பிரச்னைக்கு தீர்வு காண, விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என, அவரிடம் மனோஜ் பந்த் உறுதி அளித்தார்.நஷ்டம்மேற்கு வங்க உருளைக்கிழங்கு வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆலோசகருமான பிபாஸ் குமார் தே கூறுகையில், ''மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு வினியோகத்தை தடுக்க, எல்லையில் மேற்கு வங்க அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக, உருளைக்கிழங்கு ஏற்றிய லாரிகளை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். ''இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெறும்படி, மேற்கு வங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால், இன்று இரவு முதல் குளிர்பதனக் கிடங்குகளில் இருந்து உருளைக்கிழங்கை எடுக்க மாட்டோம்,'' என்றார்.

நாளை முதல் வேலைநிறுத்தம்

மேற்கு வங்க உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலர் லாலு முகர்ஜி நேற்று கூறியதாவது:மேற்கு வங்க அரசின் திடீர் நடவடிக்கை, எங்கள் வியாபாரத்தை பாதித்துள்ளது. பல வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால், நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
டிச 02, 2024 11:04

வேண்டப்பட்ட வங்கதேசத்துக்கு அனுப்ப வசதியாகவும்.


S.V ராஜன்(தேச பக்தன்...)
டிச 02, 2024 09:40

இந்தியர்கள் என்ற உணர்வே இல்லாத இவர்களின் கூட்டணி பெயர் இண்டி... கொடுமை


GMM
டிச 02, 2024 08:54

மேற்கு வங்க உருளை கிழங்கு விலையை கட்டுப்படுத்துவதாக கூறி, மம்தா ஜார்கண்டில் தட்டுப்பாடு ஏற்படுத்துவது தேச ஒற்றுமைக்கு எதிர். மாநில மக்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொள்வர். மாநிலங்களுக்கு இது போன்ற அதிகாரம் இல்லை? கள்ள குடியேறிகள் / கடத்தல் தான் விலை அதிகரிக்க காரணம் ? திடீர் தேவை அதிகரிப்பு. முதலில் அவர்களை வெளியேற்று. உலகம் ஒரு சந்தை என்ற நிலை. நுகர்வை வியாபாரிகள் அறிவர். தற்போது சேமிப்பு கிடங்கு வசதி. இறக்குமதி எளிது. மொழிவாரி மாநில பிரிப்பு அதிகாரத்தை தவறாக கையாள்கிறது. இது போன்ற உத்தரவு தேச ஒற்றுமைக்கு பாதிப்பு விளைவிக்கும்.


M S RAGHUNATHAN
டிச 02, 2024 07:39

இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் தானே இருக்கிறது. பின்.ஏன் இந்த முரண்பாடு. கூடிய சீக்கிரம் ஒரு கட்சி பிச்சுக்கும்.


Dharmavaan
டிச 02, 2024 09:02

அது வாங்க மட்டும்தான் உதவும் அல்ல


raja
டிச 02, 2024 02:32

மம்தா வின் முடிவு சிறப்பு.. இதே போன்றுதான் கருணாநிதியின் ஆட்சியில் அண்டை மாநிலங்களின் அரிசி தேவை அதிகரித்ததால் தமிழகத்தில் லெவி என்கிற கட்டு பாட்டை நீகியதால் அண்டை மாநிலங்களுக்கு அரிசியை திமுகவினர் கடத்தி விட்டு கொள்ளை லாபம் பார்த்தனர் ...அதே நேரம் தமிழகத்தில் அனாகளில் விற்ற அரிசியின் விலை ஒரே நாளில் ரூபாயில் விற்றதால் தமிழகத்தில் பஞ்சம் வந்தது... வயதானவர்கள் உங்கள் வீடுகளில் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே.. முக்கியமாக இந்த கோவால் புற கட்டுமர கொள்ளை கூட்டம் தான் வாழ ஆயிரம் தமிழர்களின் உயிரை கூட பறிக்க தயங்காது ..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 02, 2024 05:54

குதிரை களவு போனபின் லாயத்தைப் பூட்டி வைத்ததைப் போல என்பார்கள் ..... முமைதா பேகத்துக்கும் நம்ம புலிகேசி அளவுக்குத்தான் அறிவு ..... இது தவறான முடிவு ..... உற்பத்தியே சந்தை சார்ந்ததாக இருக்க வேண்டும் .....