உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா பெயரை கெடுக்க மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சி

தர்மஸ்தலா பெயரை கெடுக்க மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சி

கொப்பால் : ''தர்மஸ்தலாவின் நற்பெயரை கெடுக்க, மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சித்து உள்ளது. எனவே, வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,'' என, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தினார். கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக எழுந்த புகார் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பொய் புகார் அளித்த சின்னையா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அசோக் நேற்று அளித்த பேட்டி:

தர்மஸ்தலாவுக்கு உள்ள நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று சில மதமாற்ற ஜிகாத் கும்பல் முயற்சித்து உள்ளது. சின்னையாவுக்கு முகமூடி அணிவித்து, ஆதரவு அளித்தது முதல்வர் சித்தராமையாவின் காங்., அரசு தான். நேத்ராவதி ஆற்றங்கரையில் பள்ளங்கள் தோண்டுவதற்கு, 2 முதல் 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதற்கு யாருடைய பணம் செலவிடப்பட்டது? யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு, சிறப்பு விசாரணை குழு அமைத்து உள்ளீர்கள். இதுவே முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என்றால், அங்கு சென்று கல்ல றையை தோண்டுவீர்களா ? அவர்களின் இலக்கு ஹிந்து கோவில்கள் மட்டுமே. புகார் அளித்தவர் குறித்து ஆரம்பத்திலேயே விசாரித்து, விசாரணைக்கு ஒப்படைத்திருக்கலாம். இவ்வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:

தர்மஸ்தலா விவ காரம் தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் விளக்கம் அளித்து விட்டேன். உண்மை வெளிவர, சிறப்பு விசாரணை குழுவை அமைத்தோம். இதற்கிடையில் பலரும் அறிக்கை வெளியிடுகின்றனர். இத்தகைய அறிக்கைகளால் உண்மை வெளிவராது. இவ்விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். உண்மை வெளிவர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். விசாரணை குழுவினருக்கு நாங்கள் வழிகாட்ட முடியாது. தர்மஸ்தலா வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை அமைப்பிடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Palanisamy Sekar
ஆக 26, 2025 08:54

இண்டி கூட்டணி ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் எல்லாம் இதுபோல சம்பவங்களை தொடர்ந்து காண்கின்றோம். இங்கே தமிழகத்தில் திமுக ஆட்சி உதவியோடு கந்தசஷ்டி கவசம் பற்றி கேவலம் பேசியது. ஆண்டாள் தாய் பற்றிய வைரமுத்துவை கண்டுகொள்ளாததால் இப்போது ராமரை பற்றிய பொய்யான பிரச்சாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளான். காரணம் நாம் பொறுமையின் சிகரத்தில் இருக்கின்றோம். திருப்பரங்குன்ற மலையை சிக்கந்தர் மலை என்று கோர்ட்டில் இதே திமுக அரசு அறிக்கை தாக்கல் செய்கின்றது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போனால் இப்படித்தான் ஜிகாத் கும்பல்கள் தொடர்ந்து நாட்டை சீரழிக்க முயற்சிக்கும். உஷார் இந்துக்களே தர்மசாலா விஷயம் மிகப்பெரிய சம்பவம். அடுத்து காசி கங்கை என்றுகூட முயற்சிப்பார்கள். மீண்டும் உஷார் இந்துக்களே.


Rajan A
ஆக 26, 2025 06:18

இதற்கு காரணம் ஒரு தமிழன் தான் என்று ஒரேயடியாக போட்டு விட்டனர். பிரியாணி, பாவாடை செய்யும் சதிகளுக்கு தமிழ் நாடே அவமானப்படுகிறது. நல்லா வைச்சு செஞ்சுட்டாங்க கான் கட்சி கூட்டணி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 06:11

சாணக்கியர் அமித் ஷா இருந்தும் கூடவா இதெல்லாம் நடக்கு >>>>


V Venkatachalam
ஆக 26, 2025 08:53

அமித் ஷா ஒரு வேலை செஞ்சா போதும். ஒரு திருட்டு அரசியல் வியாதியை நாற் சந்தியில் நிக்க வச்சு சுட்டு தள்ளிட்டார்ன்னா தர்மராஜ் கேக்குற கேள்வி மாதிரி எவனுமே கேக்க மாட்டானுங்க. நாடு அமைதி ஆயிடும்.


Kasimani Baskaran
ஆக 26, 2025 03:47

இதற்க்கு கருவாக இருந்தது தமிழக முன்னாள் ஐ ஏ எஸ் சசிகாந்த் செந்தில் - அவரையும் என் ஐ ஏ மூலம் விசாரிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை