உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை ரெடி 10 லட்சம் பேருக்கு: 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

வேலை ரெடி 10 லட்சம் பேருக்கு: 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

புதுடில்லி: நாட்டில் 12 தொழில்நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் 12 தொழில் நகரங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wr5nvmxj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குர்பியா( உத்தரகண்ட்), ராஜ்புரா - பாட்டியாலா( பஞ்சாப்), திஹி( மஹாராஷ்டிரா) , பாலக்காடு(கேரளா), ஆக்ரா, பிரயாக்ராஜ்( உ.பி.,), கயா( பீஹார்), ஜாகீராபாத்(தெலுங்கானா), ஒரவகல், கோபார்த்தி(ஆந்திரா) மற்றும் ஜோத்பூர் - பாலி( ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் இந்த தொழில்நகரங்கள் அமைய உள்ளன.இதன் பிறகு நிருபர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தேசிய தொழில்துறை காரிடர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 தொழிற்பேட்டை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக அரசு ரூ.28,602 கோடி முதலீடு செய்யும் இதன் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும்,30 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும். உற்பத்தி நடவடிக்கைகள் அனைத்தும் இன்று இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து உள்ளது. மின்னணு, மொபைல்போன் மற்றும் பாதுகாப்புதுறை சார்ந்த உற்பத்தி அனைத்தும் இந்தியாவை நோக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஆக 28, 2024 18:58

வடமாநிலங்களில் தொழில்நகரங்கள் அமைத்தால், அங்குள்ள வேலையாட்கள் தமிழகம் வரவேண்டிய அவசியம் இருக்காது. தமிழகத்தில் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களை வடமாநிலங்களுக்கு திருப்பிவிடுவதால், நாட்டில் சீரான வளர்ச்சி ஏற்படும். ஒரு சைடு மட்டும் வளர்ந்தால், அது வளர்ச்சி அல்ல. வீக்கம்.


Jayaraman Gopalakrishnan
ஆக 28, 2024 18:49

அருமையான செய்தி , உற்பத்தி துறையில் இந்தியா சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.


அப்புசாமி
ஆக 28, 2024 18:28

ரெண்டு கோடி வேலை... எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.


murugan
ஆக 28, 2024 19:37

11 லட்சம் கோடி முதலீடு எங்கே போனது ? 2 லட்சம் வேலை எங்கே போனது ? முதலில் உனது முகத்தை கண்ணாடியில் பார்த்துவிட்டு மற்றவர்களை பற்றி பேசு. கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியாதே.


பாமரன்
ஆக 28, 2024 18:16

வழக்கம் போல தமிழ் நாட்டுக்கு பட்டை நாமம்..மத்தவன்களுக்கு ஓகே ... இங்கே எய்ம்ஸ் மாதிரி அறிவிச்சிட்டு வரலைன்னா அசிங்கப்படுத்தறாங்க குமாரு... .‌எனிவே இவனுவ இப்போதான் அறிவிப்பு குடுக்கறானுவ... இது இனி அதானி ஒத்துக்கிட்டு நிம்மி ஒத்துக்கிட்டு எவ்ளோ வசூலாகும்னு கால்குலேட் பண்ணி வர்றதுக்கு. ... வந்தால்... அடுத்த தேர்தல் ஆகிடும்... ஆனால் தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கிட்டத்தட்ட இருபது சிப்காட் தொழில் நகரங்கள் உருவாக்கி செயலாக்கத்துக்கே வந்தாச்சு... பார்த்து வாய்க போடுங்க பகோடாஸ்... நம்ம ஜி கருப்பு பலூனுக்கு பயந்து செவுத்துல ஓட்டை போட்டு வந்து அறிவிச்ச டிஃபன்ஸ் காரிடரே இன்னும் ஐந்து வருடங்கள் ஆன பிறகும் பேப்பர்ல தான் இருக்கு...


சமீபத்திய செய்தி