உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2ஜி குறிப்பு விவகாரம் அடங்கியபாடில்லை : பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறார் ஜோஷி

2ஜி குறிப்பு விவகாரம் அடங்கியபாடில்லை : பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறார் ஜோஷி

புதுடில்லி : '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, நிதி அமைச்சகம் அனுப்பிய குறிப்பில் இடம்பெற்றுள்ள விஷயங்களில், தனக்கு உடன்பாடு இல்லாத விஷயம் எது என்பதை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவிக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு, நிதி அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பு சமீபத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குறிப்பு, நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்டது தான் என ஏற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆனால், அதில் இடம் பெற்றுள்ள யூகத்தின் அடிப்படையிலான விஷயங்களுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

அப்படியானால், யூகத்தின் அடிப்படையிலான விஷயம் என்று, எந்த விஷயத்தை பிரணாப் முகர்ஜி கூறுகிறார்? இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். நிதி அமைச்சக குறிப்பில் உள்ள சில விஷயங்களில், தனக்கு உடன்பாடு இல்லாத விஷயம் என்று, அவர் எதைக் கூறுகிறார்? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தை பொறுத்தவரை, 'குடும்பத் தலைவரின்' விருப்பத்துக்கு, பிரணாப் முகர்ஜி அடிபணிந்து விட்டார். இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்