வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பரவாயில்லை போதையிலும் தேசபக்தி குறைய வில்லை பாராட்டுவோம் உண்மையான இந்தியன்ஸ்
காந்தி சிலை உடைந்ததற்காக அழும் இவர்கள், குடியை விடலாமே. காந்தி குடிக்க சொல்லவில்லையே.
கன்னோஜ்;உ.பி.,யில் விபத்தில் காந்தி சிலை சேதம் அடைந்ததை கண்டு குடிபோதையில் இருவர் கட்டிப்பிடித்து அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; கன்னோஜ் பகுதியில் காந்தி சதுக்கம் உள்ளது. இங்குள்ள காந்தி சிலை டிரக் லாரி மோதியதில் முற்றிலும் சேதம் அடைந்து சுக்குநூறானது.இந் நிலையில், அதே பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்தது. அப்போது விபத்து நிகழ்ந்த பகுதிக்கு நடுத்தர வயதுடைய ஒருவரும், அவருடன் வயதான நபரும் வந்தனர். ஹோலி பண்டிகை என்பதால் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.காந்தி சிலை சுக்குநூறாக உடைந்து இருப்பதைக் கண்டனர். அடுத்த நொடியே, காந்தி தங்களை விட்டுவிட்டு போய்விட்டாரே என்று இருவரும் ஓலமிட்டனர். பின்னர், தரையில் உட்கார்ந்து. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தப்படியே கதறி, கதறி அழுதனர்.அப்போது நடுத்தர வயதுடைய நபர், தரையில் இருந்த மண்ணை கைகளில் எடுத்து, தம்மை போன்று கதறி அழுதபடி இருந்த முதியவர் தலையில் அள்ளி, அள்ளி போட்டார். கட்டிப்பிடித்த கதறி அழுத இருவரையும், அவ்வழியே சென்ற பலரும் ஒரு கணம் பார்த்தபடியே ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.இந்த சம்பவத்தை கண்ட சிலர், தமது செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
பரவாயில்லை போதையிலும் தேசபக்தி குறைய வில்லை பாராட்டுவோம் உண்மையான இந்தியன்ஸ்
காந்தி சிலை உடைந்ததற்காக அழும் இவர்கள், குடியை விடலாமே. காந்தி குடிக்க சொல்லவில்லையே.