உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை... துவங்குகிறது!  அரசை திணறடிக்க பா.ஜ., கூட்டணி தயார்

 கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை... துவங்குகிறது!  அரசை திணறடிக்க பா.ஜ., கூட்டணி தயார்

பெங்களூரு : லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், நாளை சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். காங்கிரஸ் அரசின் தோல்விகளை கூறி, திணறடிக்க பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தயாராகி வருகின்றன.மத்திய பா.ஜ., அரசின் பதவிக்காலம், மே மாதத்தில் நிறைவு பெறுகிறது. புதிய ஆட்சிக்கான தேர்தல் நடத்த இந்திய தேர்தல் கமிஷன் தயாராகிவருகிறது.அதே வேளையில் தேர்தலுக்குஆயத்தமாகும் வகையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுறுசுறுப்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.கவர்னர் உரைஇத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், நாளை துவங்குகிறது. 2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், சட்டசபை, சட்ட மேலவை கூட்டுக் கூட்டத்தொடரில் நாளை காலை 11:00 மணிக்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார்.உரையாற்ற வரும்படி, சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, செயலர் மஹாலட்சுமி ஆகியோர், நேற்று கவர்னரை சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தனர்.கவர்னர் உரைக்கு பின், முதல் நாள் கூட்டம் முடிக்க வாய்ப்பு உள்ளது.16ல் பட்ஜெட்பின், 13ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடக்கும். 15ம் தேதி வரை தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். 16ம் தேதி, நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.அதன் பின், 22ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடக்கும். இறுதி நாளில், அரசு தரப்பில் முதல்வர் பதில் அளிக்கிறார்.இதே வேளையில், ஆளுங்கட்சி தரப்பில் முக்கிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, திணறடிக்க பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தயாராகின்றன.ஒப்பந்ததாரர்களின் 40 சதவீதம் குற்றச்சாட்டு; வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ளாதது; தண்ணீர் பிரச்னை; வாக்குறுதி திட்டங்கள் சரியாக அமல்படுத்தாதது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, சட்டசபை, சட்ட மேலவையில் எழுப்புதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.எதிர்க்கட்சி கேள்விகளுக்கு, தக்க பதிலடி கொடுப்பதற்கு துல்லியமான புள்ளி விபரங்களை தயாரித்து வைத்து கொள்ளும்படி அதிகாரிகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளனர்.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஊடகத்தினருக்கு, காலை, மதியம் என இரண்டு வேளைகளில், பெங்களூரு நகரின் பிரபல ஹோட்டல்களில் இருந்து வித விதமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.தேர்தல் நேரம் என்பதால், இம்முறை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு, நாளை முதல், 23ம் தேதி வரை, தலைமை செயலகமான விதான் சவுதாவைச் சுற்றி 2 கி.மீ., சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதான் சவுதா சுற்று வட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ