உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலி சாதனை சான்றிதழ் கிண்டலில் சிக்கிய கர்நாடக முதல்வர்

போலி சாதனை சான்றிதழ் கிண்டலில் சிக்கிய கர்நாடக முதல்வர்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்திற்கு, உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளத்தில் சான்றிதழை வெளியிட்ட நிலையில், அது போலி என தெரியவந்ததால் அந்த பதிவை நீக்கினார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு மகளிருக்கு இலவச பஸ் பயணம், 'சக்தி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப் படுகிறது. இந்த திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து அக்டோபர் வரை பெண்கள், 564 கோடி இலவச பயணங்களை மேற்கொண்டதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டனில் உள்ள, 'லண்டன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அதற்காக வழங்கப்பட்ட சான்றிதழை வெளியிட்டார். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த சமூக வலைதள பயனர்கள், அது போலி என கண்டறிந்தனர். முதல்வர் சித்தராமையாவை சகட்டுமேனிக்கு கிண்டலடித்தனர். 'சான்றிதழ் வழங்கிய அமைப்பு பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் ஜூலை 2025ல் மூடப்பட்டதாக, பிரிட்டன் அரசின் கம்பெனிகள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதன் பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழுக்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை' என குறிப்பிட்டனர். 'எக்ஸ்' சமூக வலைதளத்தின் உண்மை சரிபார்ப்பு குழுவும் இதை உறுதிப்படுத்தியது. இதனால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த உலக சாதனை சான்றிதழ் பதிவை முதல்வர் சித்தராமையா நீக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kulandai kannan
அக் 18, 2025 12:25

சகவாஷ தோஷம்


Kannan
அக் 18, 2025 10:14

The entire Congress)I) is full of frauds


Shekar
அக் 18, 2025 10:03

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், டான்சானியா பழங்குடிகள் கொண்டாடும் விடியலார் என்ற நம்ம டெக்னீக்தான் காப்பி அடிக்கப்பட்டு, பிறகு கிழிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றனர்


Chandru
அக் 18, 2025 09:55

This tamil proverb is now apt to Karnataka Govt -. வர வர மாமியார் கழுதை போலானாள் .


SVR
அக் 18, 2025 09:36

கர்நாடக மாநில முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஒரு சேதி வந்தால் அதன் மெய்த்தன்மையை ஆராய வேண்டாமா? நானே, எனக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி தகவல் வந்தால் அது மெய்யா அல்லது பொய்யா என்று ஊர்ஜித படுத்தி கொள்ள முயற்சி எடுத்து அது பற்றி அறிந்த பின் தான் அதை பற்றி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன். முதல்வர் அலுவலகத்துக்கு இது கூடவா தெரியாது? வினோதமாக இருக்கிறது. முதல்வரை பற்றி குற்றம் சொல்ல முடியாது. அவருடைய அலுவலகம் தான் இதற்கு பொறுப்பு.


Rameshmoorthy
அக் 18, 2025 09:02

Like E VE RA award


Chandhra Mouleeswaran MK
அக் 18, 2025 08:51

"மூன்றுபடி "அளந்த" மன்னவரு" அந்த ஊருக்காரருதானெ? அத்துனால நல்ல டிரைனிங் குட்த்திருப்பாருதானெ?


VENKATASUBRAMANIAN
அக் 18, 2025 08:07

திராவிடத்தில் இணைந்து விட்டாரா


duruvasar
அக் 18, 2025 08:07

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


நிக்கோல்தாம்சன்
அக் 18, 2025 07:43

அடுத்த திராவிடர்களுக்கு ஷாக்கு


முக்கிய வீடியோ