உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் ஓட்டு திருட்டு புகாருக்கு எதிராக கருத்து: கர்நாடக காங்., அமைச்சர் பதவி பறிப்பு

ராகுலின் ஓட்டு திருட்டு புகாருக்கு எதிராக கருத்து: கர்நாடக காங்., அமைச்சர் பதவி பறிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஓட்டு திருட்டு குறித்த ராகுல் குற்றச்சாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கர்நாடக காங்., அரசின் கூட்டு றவுத் துறை அமைச்சர் ராஜண்ணா, பதவி நீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தவர் ராஜண்ணா, 74. மனதில் பட்டதை பேசி, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். சித்தராமையாவின் தீவிர ஆதரவா ளராக இருந்த ராஜண்ணா, துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். கடந்த மாதம், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூருக்கு வந்து காங்கி ரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களு டன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்ளாத ராஜண்ணா, 'எம்.எல்.ஏ.,க்களுடன் கூட்டம் நடத்த ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது' என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் போராட்டம் ராஜண்ணாவின் கருத்துகள், கட்சி மேலிடத்தை அதிருப் தியில் தள்ளியது. ஆனாலும், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் ஓட்டு திருட்டு நடந்ததாக கூறி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் புதிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். பெங்களூரு மஹாதேவபுரா சட்ட சபை தொகுதியில் ஓட்டு திருட்டு நடந்தது குறித்தும் ராகுல் பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஜண்ணா, 'ஓட்டு திருட்டு நடந்தது உண்மை தான். லோக்சபா தேர்தல் நடந்தது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது எல்லாம் எங்கள் ஆட்சியில் தான் நடந்தது. 'அப்போது, கண்ணை மூடிக்கொண்டு இருந்தனரா' என்றார். இதை வைத்து, ஓட்டு திருட்டு குறித்து பேசும் ராகுலை, பா.ஜ., கடுமையாக விமர்சித்தது. மேலிடம் கோபம் இதனால், கோபம் அடைந்த காங்கிரஸ் மேலிடம், ராஜண்ணாவின் அமைச்சர் பதவியை பறிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து, நேற்று காலை கவர்னருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பினார். அதை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஏற்றுக் கொண்டார். ராஜண்ணா நீக்கம் குறித்து தகவல் வெளியானதும், எதிர்க்கட்சி தலைவர்கள், காங்கிரசை விமர்சிக்க ஆரம்பித்தனர். 'ஓட்டு திருட்டு என்று பொய் குற்றச்சாட்டு கூறும் ராகுலுக்கு எதிராக பேசியதால், மனதில் பட்டதை நேரடியாக பேசிய நேர்மையான அரசியல்வாதியை, காங்கிரஸ் பலிகடா ஆக்கிவிட்டது' என்று விமர்சித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !