உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு

ரூ.40,000 கோடி கடன் வாங்கும் கர்நாடக அரசு

பெங்களூரு: வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், 40,000 கோடி ரூபாய் கடன் பெற, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.நிதித்துறை அமைச்சருமான, முதல்வர் சித்தராமையா, சமீபத்தில் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்தது. எனவே வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.வளர்ச்சி பணிகளுக்கு பணம் தேவைப்படுவதால், நவம்பர், டிசம்பரில் தலா 20,000 கோடி ரூபாய் கடன் பெற, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை