மேலும் செய்திகள்
ஜாபர்சாதிக் ஜாமின் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்
22-Dec-2024
பெங்களூரு: லஞ்சம் வாங்கிய தலைமை ஏட்டு வழக்கில் லோக் ஆயுக்தா போலீசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.சிக்கபல்லாபூர் பட்டப்பள்ளி போலீஸ் நிலைய தலைமை ஏட்டு ராமாச்சாரி. 2014ல் தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க, அதன் உரிமையாளரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து அந்த நபர், பெங்களூரு ரூரல் லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு, சிக்கபல்லாபூர் லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதற்கிடையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை ஏட்டு ராமாச்சாரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 'லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய விசாரணையில், பல குளறுபடிகள் உள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவரின் குரல் மாதிரிகள், அரசு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பாமல், தனியார் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சிக்கபல்லாபூர் லோக் ஆயுக்தா போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனு மீதான விசாரணை, நீதிபதி ஸ்ரீசானந்தா முன்னிலையில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, சிக்கபல்லாபூர் லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
22-Dec-2024