உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ‛‛ தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது '' என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தவிட்டது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவசர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பிறகு சித்தராமையா கூறியதாவது: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை செயல்படுத்த முடியாது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளது. காவிரி பாசன பகுதியில் 28 சதவீத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது. காவிரி விவகாரம் குறித்து பரிசீலனை செய்ய வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

krishnan
ஜூலை 15, 2024 18:46

கோர்ட் ஒன்னியும் செய்யாது . அவர்களுக்கு தண்ணீர் நிரம்பிய பின் மீதியை திறப்பார்கள். அது கடலில் சேரும். நம் சர்க்கார் ஒரு வுதாரி என ஒரு கர்நாடக அரசியல் வாதி , தமிழர் ..கூறினார். உண்மை . excess தண்ணீரை சேமிக்க ஒரு மண்ணும் செய்ய மாட்டோம். அவர்களையும் ஆ ணை கட்ட அனுமதித்தோம் . நமக்காக கர்நாடக ஆணை காவேரியில் கட்டி தரும் என எதிர்பாத்திருக்க கூடாது ..அப்போதைய தமிழக காங்கிரஸ் dmk வை எதிர்த்து .. கலைக்கருக்கு ஏதோ நிர்பந்தம் . துரோகம் நடந்து விட்டது


vijay, kovai
ஜூலை 13, 2024 05:49

எடப்படியார் வாய திறப்பதில்லை எதிர் கட்சியாக இருக்க தகுதி இல்லை,பாராளுமன்ற தேர்தலில் தொற்றதிற்கான காரணம் மட்டும் தேடுகிறார்


Bharathi
ஜூலை 13, 2024 01:18

துறை அந்த வாயே திறக்க மாட்டாரு. ஒரு ஆணியும் புடுங்க மாட்டாரு. கர்நாடகாவை பகைச்சிகிட்டா அங்க இருக்குற சொத்து பத்து பிஸினஸுக்கு எல்லாம் பிரச்னை வந்துட கூடாது பாருங்க. இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகள் திருடர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் புத்திசாலிகள்


இராம தாசன்
ஜூலை 12, 2024 23:23

இதுக்கும் மோடிஜி தான் காரணம் என்று ஒரு கும்பல் கிளம்பும்


sankaranarayanan
ஜூலை 12, 2024 22:23

பப்புவைக்கூப்பிடுங்கள் விழா நடத்துங்கள் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் சிந்துவின் விளையாட்டை கண்டிக்க தமிழகத்தில் ஆளே இல்லையா


R KUMAR
ஜூலை 12, 2024 21:39

தமிழகத்தில் உள்ள, தி.மு.க-வின் தோழமையாக உள்ள காங்கிரஸ் கட்சி அவர்களால் ஆளப்படும் கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து, தண்ணீர் திறந்துவிட நடவடிக்கையோ, ஆர்பாட்டமோ செய்யாமல், கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இதை தி.மு.க கட்சியும் கண்டிக்கவில்லை. இதே கட்சி சில ஆண்டுகளுக்கு முன்னாள், கர்நாடகாவை பி.ஜெ. பி. கட்சி ஆளும் சமயத்தில், மைய அரசின் மூலம் தமிழக பி.ஜெ.பி அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறியது நினைவிற்கு வருகிறது.


Venkatasubramanian krishnamurthy
ஜூலை 12, 2024 21:19

சித்தராமய்யா தன் மாநில நலனுக்கு பேசுகிறார். மாநிலம் முன்னேற அவர் காட்டும் அக்கறையை திராவிட மாடல் மௌனமாக பாராட்டுகிறது. தொட்டுத் தொடர்ந்து வரும் கூட்டணி தர்மத்திற்காக சித்தராமய்யாவின் மேகதாது அணைக்கு தன்னிடம் உள்ள முதல் செங்கல்லை மூன்றாம் கலைஞர் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி விழா எடுக்காமல் ரகசியமாகத் தருவார். ஆல் தி பெஸ்ட்.


rsudarsan lic
ஜூலை 12, 2024 20:36

அளவை வேண்டுமனால் குறைக்கலாம். தர மாட்டேன் என்பது திமிர். ஓட்ட நறுக்க வேண்டியது


rsudarsan lic
ஜூலை 12, 2024 20:35

டிஸ்மிஸ் செய்யவும்


Partha
ஜூலை 12, 2024 20:25

தமிழ் நாட்டுல திமுக அஸ்தமனம் ஆரம்பம் ஆயிடுச்சி னு தோணுது..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி