உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில், டில்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர்.கரூர் வேலுச்சாமிபுரத்தில், செப்டம்பர் 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உச்ச நீதிமன்ற குழு கண்காணித்து வருகிறது.விசாரணை அடுத்த கட்டத்திற்கு சென்றது. த.வெ.க., மாநில பொதுச் செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, இணைச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலர் மதி யழகன் ஆகியோருக்கு, விசாரணைக்கு இன்று ஆஜர் ஆகுமாறு சி.பி.ஐ., அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, இன்று (டிசம்பர் 29) ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த விசாரணை இன்று முழுவதும் நடக்கும் என சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

CM Prabhakaran
டிச 29, 2025 14:29

CBI இன்றைய விசாரணைக்கு பின் இவர்கள் 4 பேரும் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று சட்டம் தெரிந்த என் நண்பர் ஒருவர் சொல்கிறார்.இல்லையென்றால் இவர்களை CBI டில்லிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லையே.


Kadaparai Mani
டிச 29, 2025 17:35

You are absolutely correct. CBI will definitely arrest them and court will remand them for custody.


கிருஷ்ணன்
டிச 29, 2025 13:57

மத"சார்பற்ற " என்ற வார்த்தைக்கு எம் மதமும் சாரதவர் என பொருள். ஆனால், ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு மதம் சார்ந்தே, இங்கே எல்லோரும், ஏன்? எல்லா கட்சிகளுமே உள்ளார்கள். "மத சார்பற்ற " என்ற வார்த்தை என்பதே, சாதியை ஒழிப்போம் என்று சொல்லி "சாதிக்" கட்சிகளுடன் கூட்டணி வைப்பதே.


GMM
டிச 29, 2025 13:45

கூட்ட நெரிசலில் 41 பேர்கள் மரணம். உடனே கூட்டம் கூட்டியவர்/ பாதுகாப்பு போலீஸ் / தொடர்பு அதிகாரிகள் அல்லது இறந்த மக்கள் வாரிசு மீது எதாவது நடவடிக்கை எடுத்து அச்சம் கொள்ள செய்ய வேண்டும். போலீஸ், வழக்கறிஞர் கூட்டாக இருந்து சட்ட கண்ணை கட்டி வருகிறார்கள். தண்டிக்க மாட்டார்கள். விசாரணை முடிக்க மாட்டார்கள். அதிகாரம் உள்ள அனைவரும் தலையிடுவார்கள். காரணம் தன் பணி என்ன என்று தெரியாது. தமிழக அரசியல் உத்தரவிற்கு காத்து நிற்கும் அவலம்?


ManiK
டிச 29, 2025 13:41

காங்கிரஸ கும்பலோட தான் இந்த தவேக கூட்டணி இருக்கும். இதுவே இயற்கையான லட்சிய மதமாற்ற தூய சக்திகளின் கூட்டணி. இந்த கருத்து தவறாக இருந்தால் சந்தோஷம்.


Gnana Subramani
டிச 29, 2025 13:11

2014 ல் திமுக காங்கிரஸ் கூட்டணியை சிபிஐ தான் நிர்ணயித்தது. அதே போல இப்போது தற்குறிகளின் கூட்டணியை நிர்ணயிக்கப் போகிறது


திகழ்ஓவியன்
டிச 29, 2025 12:58

நர்ஸ் போராட்டம், ஆசிரியர் போராட்டம் எல்லாம்.. சைடுல போகட்டும் ஜனநாயகனில் பிஸியான விஜய்.. அடப்போங்க


vivek
டிச 29, 2025 15:36

அறிவிலி திகழ்... நர்ஸ் போராட்டம்..ஆசியர் போராட்டம் இரண்டுக்கும் திமுகவே காரணம்...அவர்கள் தான் தீர்வு காணவேண்டும்


Govi
டிச 29, 2025 12:51

ஆட்டம் ஓவர்


Vasan
டிச 29, 2025 11:12

பாஜக கரூர் சம்பவம் மூலம் தவேகாவை தன் பக்கம் இழுக்க பார்த்தது. விஜய் அவர்கள் சம்பவத்திற்கு பின் இரு மனதோடு இருந்தாலும், உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின், பாஜகவை கண்டு கொள்ள வில்லை. பாஜகவும் பொறுத்து பொறுத்து பார்த்தது. விஜய் மசிய வில்லை. எனவே, இந்த முறை தீர்ப்பு விஜய்க்கு பாதகமாகவே இருக்குமென எதிர்பார்க்கலாம்.


ராமகிருஷ்ணன்
டிச 29, 2025 10:37

அணில் அண்ணன் விசாரணைக்கு போகவில்லையா.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை