உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காமில் கூடியது காஷ்மீர் அமைச்சரவை!

பஹல்காமில் கூடியது காஷ்மீர் அமைச்சரவை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: உள்ளூர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் சுற்றுலா தலத்தில் காஷ்மீர் மாநில அமைச்சரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0j1htsz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளும் தாக்கப்பட்டன. தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான், போர் நிறுத்தம் வேண்டும் என கெஞ்சியது. அதை இந்தியா ஏற்ற நிலையில் தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த பஹல்காம் பகுதி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், அங்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஏற்பாடு செய்தார்.அதன்படி இன்று அவரும், அவரது அமைச்சரவை உறுப்பினர்களும், பஹல்காமில் கூடிய சிறப்பு கூட்டத்தில் விவாதித்தனர்.ஜம்மு காஷ்மீரில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மூன்றாவது ஒரு இடத்தில் அமைச்சரவை கூட்டம் கூடியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Keshavan.J
மே 27, 2025 20:32

அவரின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் எல்லாம் Jammu & Kashmir National Conference NCJammu Republic Party JRP Indian National Congress Congress Communist Party of India CPI Communist Party of India Marxist CPIM Jammu and Kashmir Peoples Democratic Party PDPJammu and Kashmir Apni Party JKAPJammu and Kashmir Workers Party JKWPJammu and Kashmir Peoples Conference JKPC Jammu & Kashmir Peoples Movement JKPM Jammu and Kashmir Awami National Conference JKANC Jamaat-e-Islami Kashmir, Jammu and Kashmir National Panthers Party, Mallah Insaf Party, Jammu and Kashmir Peoples Conference JKPCJammu and Kashmir Awami Ittehad Party போன்ற கட்சிகளில் உள்ள தலைவர்கள் மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தினர், சுற்றுலா வரும் மக்கள் உள்ள இடத்தில இருக்க வேண்டும். தீவிர வாதிகள் இவர்களை கொல்ல மாட்டார்கள்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 27, 2025 19:33

இவரு மோடியின் பக்தர் ஆயிட்டாருன்னு விடியாத கும்பல் உருட்ட வாழ்த்துக்கள்


S Srinivasan
மே 27, 2025 18:58

l appreciate the CM decision, true nationalistic move. long live Mr. umar abdullah.


Ramanujan
மே 27, 2025 18:37

இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி.


chanakyan
மே 27, 2025 18:04

இது போன்றே இந்திய பிரபலங்கள் நடந்த போருக்கான ஆதரவோடு நிறுத்திக் கொள்ளாமல் காஷ்மீருக்கு சில நாட்கள் சுற்றுலா செல்ல முற்பட வேண்டும். தேச பக்தியை வெளிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் காஷ்மீர் மக்களுக்கும் ஆதரவளித்த மாதிரி இருக்கும்.


sankaranarayanan
மே 27, 2025 17:38

வரவேற்கிறோம் நல்ல முடிவு பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் இனி விஷமம் செய்து மாட்டிக்கொள்ளமாட்டார்கள்


உண்மை கசக்கும்
மே 27, 2025 16:39

உமர் அப்துல்லாவிற்கு கோடி வாழ்த்துக்கள்


புதிய வீடியோ