உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல் ஆளும் கட்சி - 3, பா.ஜ., - 1

காஷ்மீர் ராஜ்யசபா தேர்தல் ஆளும் கட்சி - 3, பா.ஜ., - 1

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு நேற்று முன் தினம் நடந்த தேர்தலில், மூன்று இடங்களை ஆளும் தேசிய மாநாட்டு கட்சி கைப்பற்றியது. பா.ஜ., ஒரு சீட்டை பிடித்தது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய, 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு, 2019ல் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்குள் ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், ஸ்ரீநகரில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று முன் தினம் நடந்தது. முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். அன்று மாலையில் ஓட்டுக்கள் எ ண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒமர் அப்துல்லா தலைமையிலான ஆளும் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் போட்டியிட்ட சவுத்ரி முகமது ரம்ஜான், சஜாத் கிச்லோ, கட்சியின் பொருளாளரான ஜி.எஸ்.ஷமி ஒபராய் ஆகிய மூன்று பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். நான்காவது சீட்டை பா.ஜ., கைப்பற்றியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் சத் சர்மா, தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இம்ரான் நபி தாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ