உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர் மருந்துச்சீட்டு இனி கன்னடத்தில் தான் இருக்கணும்; தடாலடி கோரிக்கையால் அரசுக்கு நெருக்கடி

டாக்டர் மருந்துச்சீட்டு இனி கன்னடத்தில் தான் இருக்கணும்; தடாலடி கோரிக்கையால் அரசுக்கு நெருக்கடி

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவர்கள் கன்னட மொழியில் மருந்துச்சீட்டு எழுதி தர வேண்டும் என உத்தரவிடுமாறு மாநில அரசுக்கு கன்னட வளர்ச்சிக் கழகம் கடிதம் எழுதி உள்ளது.

முக்கிய கோரிக்கை

கர்நாடகாவில் கன்னடத்துக்கு அம்மாநில மக்களும், அரசும் அளித்து வரும் முக்கியத்துவம் பலரும் அறிந்த ஒன்று. அதில் லேட்டஸ்ட்டாக முக்கிய கோரிக்கை ஒன்று வலுப்பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் அனைவரும் இனிமேல் தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டுகளில் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதே. முழுமையாக சொல்ல வேண்டுமானால் மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை.

கடிதம்

இந்த முக்கிய கோரிக்கையை அம்மாநில கன்னட வளர்ச்சிக் கழகம் மாநில அரசுக்கு முன் வைத்துள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கிறது. கன்னட வளர்ச்சிக் கழக தலைவர் புருஷோத்தம பிலிமாலே கூறியதாவது;

மொழிக்கு முக்கியத்துவம்

தாலுகா, மாவட்டம் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதற்காக மருந்துச்சீட்டுகளில் கன்னட மொழிகளில் மருந்துகளின் பெயர்களை எழுத முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எளிதில் புரியும்

கன்னட மொழியை பெருமைப்படுத்தும் விதத்திலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த நடவடிக்கை அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த தடாலடி கோரிக்கையால், அரசுக்கு நெருக்கடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மருந்துச்சீட்டு

கன்னட மொழியில் மருந்துச்சீட்டுகள் என்ற கோரிக்கை குறித்து வேறு ஒரு கருத்துருவாக்கத்தையும் நடுநிலையாளர்கள் முன் வைக்கின்றனர். மருந்துகளின் அட்டைகள், டானிக் பாட்டில்கள் என அனைத்திலும் ஆங்கிலம் தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆங்கில மொழியில் தான் மருந்துகள் பெயர் அச்சிடப்பட்டு உள்ளன.

யார் பொறுப்பு?

அப்படி இருக்கும் போது மருந்துச்சீட்டில் கன்னட மொழியில் எழுதி என்ன பயன்? கன்னடத்தில் மருந்துச்சீட்டு, ஆங்கில எழுத்துகளில் மருந்துகள் எனும் போது யாரேனும் புரியாமல் மருந்தை மாற்றிக் கொடுத்துவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை அவர்கள் முன் வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A. R. Pushparaj
செப் 11, 2024 22:33

மருந்து தயாரிப்பாளர் என்ன செய்யவேண்டும் .


M Ramachandran
செப் 10, 2024 19:31

இதில் அரசு கேனையனா அல்லது டாக்டர்கள் கேனைய்யன்ங்களா பார்ப்போம்


sankaranarayanan
செப் 10, 2024 17:29

இதற்கு முக்கிய காரணமே திராவிட கட்சிகள்தான் இவர்களுக்கு தேச ஒற்றுமையை பற்றி ஒன்றுமே தெரியாது நாடு சின்னாபின்னமானால் இவர்களுக்கு உற்சாகம்


chennai sivakumar
செப் 10, 2024 12:43

மொழி பைத்தியக்காரத்தனம் கர்நாடகாவை குட்டிசுவர் ஆக்க போகிறது. ஏற்கனவே கன்னட மானிலத்தவர்க்கு மட்டுமே வேலை என்று பூதம் கிளம்பி திரும்ப சீசாவில் அடைக்க பட்டு உள்ளது. அது திரும்ப வெளியில் வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை தனியார் அலுவலகங்கள் கர்நாடகாவை விட்டு ஓட தயாராகி விட்டது. இந்த லட்சணத்தில் இதுவெற. நாளைக்கு கண்ணடகாரணுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுப்போம் என்று வரலாம். இந்தியாவில் ஜனத்தொகை பிரச்சினையை கூட தீர்த்து விடலாம். தீர்க்கவே முடியாதது மொழி பிரச்சினை மற்றும் மத பிரச்சினை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை