UPDATED : மே 10, 2024 07:16 AM | ADDED : மே 09, 2024 09:45 PM
டேராடூன்: கேதார்நாத், கங்கோத்ரி கோயில்கள் இன்று(மே.10) திறக்கப்பட உள்ளன.உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில், ஒவ்வொரு ஆண்டும் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிர்காலத்தில் மூடப்பட்டு, கோடை காலத்தில் திறக்கப்படும். இதன்படி, கடந்த நவம்பரில் மூடப்பட்ட கோவில், பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று (மே.10)திறக்கப்படுகிறது. இதையொட்டி கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மேலும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய கோயில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட உள்ளன.