உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி திட்டங்களால் மாதம் ரூ.35,000 சேமிப்பு கெஜ்ரிவால் வீடியோவில் பிரசாரம்

ஆம் ஆத்மி திட்டங்களால் மாதம் ரூ.35,000 சேமிப்பு கெஜ்ரிவால் வீடியோவில் பிரசாரம்

புதுடில்லி:“டில்லியில் ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய திட்டங்கள் வாயிலாக, பா.ஜ., ஆதரவாளர்கள் கூட மாதந்தோறும் 25,000 ரூபாய் வரை தங்கள் செலவில் சேமிக்கின்றனர்,”என, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இதுகுறித்து, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:பா.ஜ., ஆளும் எத்தனை மாநிலங்களில் சர்வதேச தரத்தில் அரசுப் பள்ளிகள் உள்ளன? அதேபோல, எத்தனை மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது? தடையின்றி 24 மணி குடிநீர் கிடைகிறதா? ஆனால், டில்லியில் 24 மணி நேரமும் குடிநீர், இலவச மின்சாரம், சர்வதேச தரத்தில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கல்வி, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை, மொஹல்லா கிளினிக்குகள் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் வாயிலாக டில்லியில் ஒவ்வொரு குடும்பமும் மாதத்துக்கு 25,000 ரூபாயை தங்கள் செலவுத் தொகையில் இருந்து சேமிக்கின்றன. இந்த திட்டங்களால் பா.ஜ., ஆதரவாளர்களும் தான் பயன்பெறுகின்றனர். இல்லை என அவர்களால் மறுக்க முடியுமா? ஆனால், டில்லியில் பா.ஜ., இந்த திட்டங்கள் எல்லாம் உடனடியாக ரத்து செய்து விடுவர்.அதேநேரத்தில், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் தொடரும். அதுமட்டுமின்றி, முதியோருக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பயணம் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் மாணவர்களுக்கு 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்தப் புதிய திட்டங்கள் வாயிலாக டில்லி மக்கள் மேலும் 10,000 ரூபாய் சேமிப்பர். மொத்த மாதாந்திர சேமிப்பு 35,000 ரூபாயாக உயரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை