உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவங்க ஆட்சிக்கு வந்தால் எந்த சேவையும் கிடைக்காது; கெஜ்ரிவால் பிரசாரம்!

அவங்க ஆட்சிக்கு வந்தால் எந்த சேவையும் கிடைக்காது; கெஜ்ரிவால் பிரசாரம்!

புதுடில்லி: 'ஆம் ஆத்மி அரசின் முன்னேற்றத்தை சீர்குலைக்க பா.ஜ., மீண்டும், மீண்டும் சதி செய்து வருகிறது. மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டளிக்க வேண்டும். ' என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.டில்லி சட்டசபைக்கு அடுத்த இரு மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் 'ஹாட்ரிக்' வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி முயற்சிப்பதால், அங்கு கடும் பனிப்பொழிவின் நடுவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் பிரசார முழக்கத்தை கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அவர்கள் ஆட்சிக்கு ஒட்டளித்தால், டில்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு, கடந்த பத்து ஆண்டுகளாக செய்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அனைத்தையும் மாற்றுவோம் என்று தேர்தல் பிரசார முழக்கம் வாயிலாக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பெண்களுக்கான இலவச பஸ் பயணம் முடிவுக்கு வரும். அரசு பள்ளிகள் மீண்டும் புறக்கணிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சை நிறுத்தப்படும். அவர்கள் தவறுதலாக ஆட்சிக்கு வந்தால், டில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கும் அனைத்து இலவச சேவைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.டில்லி மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டளிக்க வேண்டும். நாங்கள் வழங்கிய வசதிகள் தொடர்வதை உறுதிசெய்ய, மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sridhar
டிச 08, 2024 15:45

இவ்வளவு நாள் ஜெயில்ல இருந்து இன்னும் எவ்வளவு கொழுப்பு பாருங்க நம்மூரு கட்டுமரத்தை போலவே இலவசங்களை வச்சே ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிற மோசமான பேர்வழி இவனெல்லாம் படிச்சும் ஒரு பிரயோசனமும் இல்ல. இவரால் படிச்சவங்களுக்கெல்லாம் கெட்டப்பேரு இவர விட்டா பஞ்சாப் தீவிரவாதிகளோடு சேர்ந்து நாட்டுக்கு எதிரா சதி செய்வார் போலருக்கே


sankaranarayanan
டிச 08, 2024 11:55

அவுங்க திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எந்த சேவையும் கிடைக்காது என்று சொல்லும் கேஜரிவாலு நீ ஆட்சிக்கு வந்தால் காராசேவையும்கூட கிடைக்காது சாராய தண்ணிரும் போதைப்பொருந்தான் கிடைக்கும்


enkeyem
டிச 08, 2024 11:41

இலவச திட்டங்கள் பெயரில் இந்த திருடன் அடித்தது மாபெரும் கொள்ளை. மீண்டும் மக்கள் இவனிடம் ஏமாறாமல் இருக்கவேண்டும்


vijai
டிச 08, 2024 10:37

கெஜ்ரிவால் மக்களை புத்திசாலித்தனமா ஓட்டளிக்க சொல்லுகிறார் பிஜேபிக்கு


Dharmavaan
டிச 08, 2024 09:21

பிஜேபி இவைகளை தொடருவோம் என்று அறிவிக்க வேண்டும். இவன் அடித்த கொள்ளை மக்கள் பணம் என்று ஒட்டர் அறிய செய்ய வேண்டும் .இலவசங்கள் அவன் சொந்த பணமல்ல மக்கள் வரிப்பணம்


வைகுண்டஈஸ்வரன்
டிச 08, 2024 09:06

எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உன்ன மாதிரி வூழல் செய்பவர் வேண்டாம்.


முக்கிய வீடியோ