உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: கெஜ்ரிவால் வாக்குறுதி

முதியோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை: கெஜ்ரிவால் வாக்குறுதி

புதுடில்லி, டில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வாக்குறுதி அளித்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.ஆளும் ஆம் ஆத்மி முன்னதாகவே 70 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து, பிரசார வேலைகளில் இறங்கிவிட்டது.இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது: டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'சஞ்சீவனி' திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும்.சிகிச்சைக்கான செலவில் உச்ச வரம்பு எதுவும் இருக்காது. இதற்கான பதிவு ஓரிரு நாட்களில் துவங்கும். ஆம் ஆத்மி கட்சியினர் உங்கள் வீட்டிற்கு வந்து பதிவு அட்டையை தருவர். அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
டிச 19, 2024 15:14

அடேங்கப்பா இது உலக மகா உருட்டா இருக்கே. அறுபது யாது மேற்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் இலவச கிச்சையா. போய் கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் செருப்பை கழட்டிகிட்டு அடிக்காது என்று சேர்த்து வாக்குறுதி கொடுங்க கெஜ்ரி.


Mohan
டிச 19, 2024 14:30

அடிச்சு விடு காசா பணமா ...கடைசில கவர்னர் அனுமதி தரல அப்டினு ப்லேட்ட்ட மாத்திட வேண்டியதுதான்


jayaram
டிச 19, 2024 10:36

முதலில் கவர்னரிடம் அனுமதி வாங்கி விட்டாரா? எல்லாம் நாடகம்தான் சும்மா கப்ஸா. கவர்னர் முன் அனுமதி இல்லாமல் இதனை நடைமுறை படுத்த முடியாது.


Barakat Ali
டிச 19, 2024 08:57

ஊழலை ஒழிக்கப்போவதாகச் சொன்னவர் ஊழலில் சாதனை படைத்துவிட்டு தேர்தல் வெற்றிக்காக வாக்குவங்கி அரசியலில் தொடர்ந்து சாதனை படைக்கிறார்.. இவரை வாழ்த்துவோம்..