உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பரிதாப பலி; கேரளாவில் அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பத்தனம்திட்டா: கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரளா மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், குடும்பத்துடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் புதுமண தம்பதிகள் மலேசியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. புதுமண தம்பதிகள் பெயர் நிகில், அனு என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.டிரைவர் தூங்கியது விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பஸ்சில் பயணம் செய்த சிலர் மற்றும் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குவைத்தில் இருக்கும் நிகிலின் சகோதரி வீடு திரும்பியதும் நால்வரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subramanian
டிச 16, 2024 08:51

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Mithun
டிச 15, 2024 12:36

கேரளாவில் ரோடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. பல உயிர்கள் தினமும் போய்க்கொண்டிருக்கிறது.


M Ramachandran
டிச 15, 2024 17:26

கேரளா ரோடுகள் தமிழகத்தை விட நன்ங்கு தரம் வாய்ந்த தாக்க இருக்கிறது . மலையய் பாதைகள் வளைவு நிறைய உண்டு. அஙகுள்ள திரிவார்கள் சாமர்த்திய சாலிகள். ஏர் போர்டிலிருந்து அந்த ட் டைரியை ரிவர் இரவில் ஊரிலிருந்து புறப்பாட்டு திரும்பிய நிலையில் ஓய்வின்றி தூங்கி விட்டார்


panneer selvam
டிச 15, 2024 17:40

it is because of Kerela Cummis that refused to remove the road side buildings to extend the highways .


Sudha
டிச 15, 2024 12:21

இந்த அரசாங்கம் இந்தியாவை ஆள்வதை கற்பனை செய்து பாருங்கள். அத்தனை சமூக கம்யூனிச மரணங்கள் அனைவருக்கும் . சமரசம் உலாவும் இடமே


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 10:19

சோகமான செய்தியில் அரசியலும், கோபம் வர்ற மாதிரி காமெடி எழுதறாங்க.


வைகுண்டேஸ்வரன்
டிச 15, 2024 10:01

செய்தியில் சம்பவம் நடந்த நேரம் இல்லை. இடம் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து 110 கி மீ தூரத்தில் பத்தனம்திட்டா இருக்கிறது. யாரு ஓவர் ஸ்பீட் தெரியல. இதுக்கும் கேரள அரசுக்கும் என்ன சம்பந்தம்???


SUNDAR RAJ
டிச 15, 2024 09:46

முதலில் எல்லோரும் இந்தியர் என்பதை நினைவில் வைக்கவும். அங்கோ காரை வேன் டிரைவர் தான் இடித்து இருக்கிறார்.


Nava
டிச 15, 2024 12:36

எல்லோரும் இந்தியர்கள்தான் என்று எல்லோரும் நினைக்க வேண்டும் ஆனால் கேரளாவில் நிலை வேறு தமிழர்கள் என்றால் அவர்களை இழிப்பதும் பழிப்பதும் அங்கு சர்வ சாதாரணம்.சொல்லுவதற்கு ஏராளம் இருக்கு என்பது தான் யதார்த்தம்.


Kavitha Sivakumar SG
டிச 15, 2024 09:16

RIP Cannot imagine their families and parents condition. So sad ?


அப்பாவி
டிச 15, 2024 09:13

கண்டவனுக்கு கார்வித்து கதிசக்தி அசுர வளர்ச்சி...


N Sasikumar Yadhav
டிச 15, 2024 09:40

இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். உங்கள மாதிரி சிலர் மத்தியரசின் குறை சொல்வதையே குறை பிறப்புரிமையாக வைத்து கொண்டிருக்கிறார்கள்


நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 08:58

நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதனைத்தான் கேரளா அரசு இன்னமும் தூங்கி கொண்டிருப்பது , மலையாளிகள் சாலையில் செய்யும் தவறு திருத்தப்படாமலே போய்விடும் என்பதனை நினைத்து வருந்துகிறேன்


புதிய வீடியோ