உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை டைரியில் கேரள முதல்வர் படம்: புதிய நடைமுறையால் எதிர்ப்பு

சபரிமலை டைரியில் கேரள முதல்வர் படம்: புதிய நடைமுறையால் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள 2024 டைரியில் மார்க்சிஸ்ட் அரசின் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் படங்கள் இடம்பெற்றுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படங்கள் முதல் முறையாக இதில் அச்சிடப்பட்டதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சபரிமலையில் மண்டல, - மகர விளக்கு கால சீசனை ஒட்டி திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஐயப்பன் கோயிலை மையமாக கொண்டு டைரி அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இதில் சபரிமலை நடை திறப்பு மற்றும் அடைக்கும் நாட்கள், பூஜை விபரங்கள், பூஜை கட்டணம் உள்ளிட்ட சபரிமலை தொடர்பான அனைத்து விபரங்களும் கேரளாவில் உள்ள முன்னணி கோயில்கள் மற்றும் சுவாமி படங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் படங்களும் இருக்கும். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறைதான் வழக்கத்தில் இருந்தது.

முதல்வர், அமைச்சர் படம்

ஆனால் 2024க்கான டைரியில் கணபதி, ஐயப்பன், சித்திரை திருநாள் பாலராம வர்மா ராஜா ஆகியோரின் படங்களை தொடர்ந்து ஆறாவது பக்கத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்த ரேசன் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன. சபரிமலை டைரியில் முதல்வர், அமைச்சர் படங்கள் இதுவரை இடம் பெற்றதில்லை.முதல்வர் பினராயி விஜயன் ஒருமுறை சபரிமலை வந்தபோது ஐயப்பன் சன்னிதானம் முன் வந்து உள் கோயிலை பார்த்தாரே தவிர கையெடுத்து வணங்கவில்லை. அதுபோல தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மேல் சாந்தி வழங்கிய தீர்த்தத்தை குடிக்காமல் கையால் துடைத்த வீடியோ வைரலானது. கடவுள்களின் படங்கள் அதிகமாக உள்ள சபரிமலை டைரியில் இறைபக்தி இல்லாதவர்களின் படங்கள் சேர்த்துள்ளதற்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . ஆனால் இது ஒரு சாதாரண நடைமுறைதான் என்று தேவசம்போர்டு கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
ஜன 04, 2024 21:47

தமிழகத்திலும் இது தொடரப்படும் எல்லா கோயில் விழாக்களின் பத்திரிகைகளில் இனி முதல்வர் படம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் நியதி ஆணை


Kandasamy Thirunamoorthy
ஜன 04, 2024 13:37

தேவசம் போர்ட் ன் தவறான முன்னுதாரணம் . சுவாமி ஐயப்பனை தவிர வேறு படங்கள் இடம் பெறுவதை பக்தர்கள் விரும்புவதில்லை.


sridhar
ஜன 04, 2024 11:50

திருஷ்டி பரிகார படம்.


ajp
ஜன 04, 2024 10:23

கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் தானே தங்களுக்கு இவர்தான் முதல்வராக வரவேண்டும் என்று ஓட்டு போட்டு திரும்பவும் முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.so no problem.


duruvasar
ஜன 04, 2024 09:41

சாமியே சரணம் ஐயப்பா.


Bala
ஜன 04, 2024 08:03

ஐயப்ப பக்தர்கள் இந்த டைரியை புறக்கணிக்க வேண்டும். காம்ரேடுகள் இதை பூஜை செய்து மகிழட்டும்.


Seshan Thirumaliruncholai
ஜன 04, 2024 07:43

படங்கள் போடுவது என்றால் அவர்களின் அனுமதி பெற்றுத்தான் போடுவது சரியான நடவடிக்கை. ஒருவரை திருப்தி செய்திட படங்கள்போடுவத தவறு. ஆண்டவன் படங்களை போடுவது 99% தவிர்த்தல் நல்லது. தேவை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறோம் . காலில் மிதிபடும் நிலையில் தரையில் போடுகிறோம். தலைவர்கள் போடுவது என்றால் அது ஒரு வியாபாரம் என்று கருதுநிலைக்கு தள்ளப்படுகிறது.


சசிக்குமார் திருப்பூர்
ஜன 04, 2024 07:18

எல்லாம் நம்ம விடியல் கூட்டணி தான் காரணம்


Ramesh Sargam
ஜன 04, 2024 07:16

அந்த டைரியை வாங்காதீர்கள், புறக்கணியுங்கள். அவ்வளவுதான் பிரச்சினை சால்வுடு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை