உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் காங்கிரசார் ஒற்றுமை: சொல்கிறார் ராகுல்

கேரளாவில் காங்கிரசார் ஒற்றுமை: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.கேரள சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத காங்கிரஸ் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யான சசி தரூர் அம்மாநில ஆளுங்கட்சியை பாராட்டி பேசி அக்கட்சியினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். இதனை அவர்கள் சமாளிப்பதற்குள், டிரம்ப்பை சந்தித்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூரால் கேரள காங்கிரசார் செய்வதறியாது திகைத்தனர்.இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் உத்திகள், வேட்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என ராகுல் அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், 'பேஸ்புக்' பக்கத்தில் ராகுல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
மார் 03, 2025 07:59

என்னாது கான் கிராஸ் கட்சி ஒற்றுமையா, கான் கிராஸ் என்றாலே. கோஷ்டி சண்டை.... வேட்டி கிழிப்பு தானே நியாபகம் வரும்!!! கேரளாவில் கம்யுனிஸ்ட் மற்றொரு முறை வென்றாலும் பரவாயில்லை. ஆனால் தப்பி தவறி கூட கான் கிராஸ் கட்சி வெற்றி பெற கூடாது.. அது இந்த நாட்டை பிடித்த கேடு ...தீவிரவாதிகளுக்கு சாமரம் வீசும் ஆட்கள்.... அந்த கட்சி அழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது.


V.Mohan
மார் 02, 2025 22:28

நல்...ல கட்சிக்காரங்கங்கப்பா இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க. தலைக்குள்ள என்ன இருக்கோன்னு கட்சிக்காரங்க முதற்கொண்டு எதிர்கட்சிக்காரங்க வரை தடுமாறி தலையை பிச்சிக்க வைக்கும் திறமை மிக்க ராகுல் காந்தி வயநாட்டில எப்படி ஜெயிச்சாரோ அதே ""மெத்தடை"" ஃபாலோ பண்ணி ஜெயிங்கன்னு அனைத்து எம்.எல்ஏக்களையும் கூப்பிட்டு பேசுனதுல அப்செட் ஆனவுங்களோட ரியாக்ஷன் ப்ளாக் அண்டு ஒயிட்டுல வந்திருச்சி போல....


Bye Pass
மார் 02, 2025 19:43

நெல்லிக்காய் மூட்டை மாதிரி ஒற்றுமை ..


Visu
மார் 02, 2025 18:54

கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்.


சமீபத்திய செய்தி