உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் எச்சரிக்கை

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்: அதிகாரிகள் எச்சரிக்கை

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதி கனமழையால் மலைகளுக்கு இடையே உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் அந்த பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 147 பேர் பலியாகினர். நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் வசித்த 400 பேரின் கதி கேள்விக்குறி ஆனது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.இந்த நிலையில், வயநாடு உள்ளிட்ட 8 கேரள மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கவர்னர் ஆய்வு

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று கவர்னர் ஆரிப் முகமது கான், நேரடி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

விபத்தில் சிக்கிய அமைச்சர் வாகனம்

வயநாட்டில் நிலச்சரிவில் மீட்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் விபத்தில் சிக்கினார். இதனையடுத்து மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 31, 2024 12:34

பாதிக்கப்பட்டவர்களுக்காக மனம் வருந்தும் இதே நேரத்தில், என் மனஆதங்கத்தையும் பதிவு செய்கிறேன். இயற்கையை அழித்து, concrete கட்டிடங்களை எழுப்பினீர்கள். இயற்கை சும்மாவா இருக்கும், காட்டியது தன்வேலையை. அரசு அதிகாரிகள், ஆட்சியில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களில் கட்டிடங்களை கட்ட அனுமதித்தார்கள். அதன் பலாபலன்தான் இது.


G Mahalingam
ஜூலை 31, 2024 10:56

இனி மலை பிரதேசத்தில் அடுக்கு மாடி லாட்ஜ் கட்ட அனுமதி அளிக்க கூடாது. சுற்றுலா பயணிகளுக்கு கூடாரம் அமைத்து அதன் மூலம் சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யலாம். இது மலை பிரதேசம் உள்ள அத்தனை இடத்திற்கும் பொருந்தும். அதிக பங்களா அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களுக்கு தான் கட்டி உள்ளனர். வருடத்தில் ஒரு மாதம் தங்குவதற்கு இது தேவை இல்லை. அரசு தடை செய்ய வேண்டும்


karthik
ஜூலை 31, 2024 12:48

மிக முக்கியமான காரணம் காடுகளை அளித்த்து தேயிலை காப்பி தோட்டங்களை உருவாக்கியது தான்.. தேயிலை காப்பி போன்றவை நம் நாட்டு பயிர்கள் இல்லை.. வெள்ளைக்காரன் இங்கு வந்ததும் அவனின் தேவைக்காக மரங்களை அளித்து தேயிலை காப்பி தோட்டங்களாக மாற்றினான்..


ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 10:49

காட்கில் குழு இது போன்று நடக்கும். மலை உச்சிகளில் கட்டுமானங்கள் கூடாது.என்றது எஸ்டேட் களை மூடிவிட்டு பெரிய மரங்களை வளர்க்க வேண்டும் . ஆனால் காங்கிரஸ் கம்யூனிஸ்டு காதில் விழவில்லையே


Mohan
ஜூலை 31, 2024 09:33

நில அமைப்புக்கு தகுந்தாப்பல கட்டிடங்கள் கட்டணும் . காசிருக்குன்னு ஊட்டி, கொடைக்கானலை, மூணார், கேரளா மாநிலத்தில் இதை கருத்தில் கொள்ளாமல் கட்டிடம் கட்டின .. இன்னும் வடநாட்டுல ஹிமாச்சல், ஹரியானா , உத்தரகாண்ட, இமயமலை பகுதிலயும் இதே கூத்துதா ..என்னைக்குமே ஆபத்துதான் மக்கள் சிந்திக்கணும் ..நம்ம அரசாங்கத்துக்கு வரி மட்டும் போதும் இதை எல்லாம் அவன் கவலையே படாது ....பாதிக்க படுறது நாம் நம் குழந்தைகள் ...இனியும் திருந்த மாட்டோம் ..வருஷ வருஷம் இதே மாதிரி நடக்குது ...எங்காவது கட்டிடம் காட்டுறது நிக்குதா ..அதுவும் எங்க டுமில் நாட்டுல இருந்து மணலை வாங்கி கட்டுறீங்க கொஞ்சம் யோசிக்க வேண்டாமா


veeramani
ஜூலை 31, 2024 09:17

ஒரு விஞ்ஞானியின் சொந்த கருத்து மலைகளில் நிலச்சரிவு பெருமழையினால் தவிர்க்கமுடியாதது. எல்நினோ வினால் இனிமேல் குறைந்த நேரத்தில் அதிக மழை பொலிவு ஏற்படலாம். கடந்த ஏழு ஆண்டுகளில் இதுபோல் உள்ளது வரும்காலங்களில் இதை சமாளிக்க ஏற்பாடுகள் நிச்சயம் செய்துகொள்ளவேண்டும். நமது நாட்டில் துயரங்கள் வந்தபின்னர்தான் அதை பற்றி சிந்திக்கிறோம் மாநில அரசுகள் விஞ்ஞானைகளை வைத்து அவர்களது அட்வைஸ் கேட்கலாம். முடிவுகள் செயல் படுத்துவது அரசின் விருப்பம் ஆனால் மனிதனால் ஒரு மில்லி தண்ணீர் கூட செயற்கையாக உற்பத்திசெய்யமுடியாது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை