உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நிதி பெறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதேநேரத்தில் மாநிலத்தின் கல்விக்கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட மாதிரி பள்ளித் திட்டம் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம். இதன் மூலம் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும். இதன் படி தற்போதுள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் 14,500 பள்ளிகளை தேர்வு செய்து, அதனை தரம் உயர்த்து திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இணையவில்லை. இதனால் அந்த மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.இந்நிலையில், இத்தனை நாட்களாக இந்த திட்டத்தில் சேராத கேரளா, தற்போது சேர்வதற்கு முன்வந்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில பொதக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: மத்திய அரசின் நிதி பெறுவதற்கு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் மத்திய அரசின் நிதி தேவைப்படுகிறது. இதில் இருந்து கேரளா தள்ளி நிற்பதற்கு எந்த காரணமும் இல்லை. கேரளா குழந்தைகள் மற்றும் கல்வித் திட்டத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய தொகை ரூ.1,466 கோடி நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் நிதி பெறுவதற்காகவே இந்த திட்டத்தில் இணைகிறோம். அதேநேரத்தில் தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. மத்திய அரசின் நிதி பெறுவதால், பல்வேறு திட்டங்களை பெற முடிவதுடன்,7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.சுகாதாரம், உயர்கல்வி மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஏற்கனவே மத்திய அரசின் நிதியை பெற்று வருகின்றன. மத்திய அரசு கூறினாலும், மாநில அரசின் கல்விக்கொள்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம்.அதேநேரத்தில் கேரள அரசில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில அரசின் திட்டம் குறித்து எங்களுக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலர் பினோய் விஸ்வம் கூறுகையில் இந்த விவகாரத்தில் முன்பு எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் இருந்து மாற்றம் ஏதும் இல்லை. மீடியாக்கள் மூலம் இது குறித்து தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mohanakrishnan
அக் 19, 2025 23:08

திருட்டு மாடலுக்கே வெளிச்சம்


ஆரூர் ரங்
அக் 19, 2025 21:31

மீசை ல மண்ணே ஒட்டல.


பாரத புதல்வன்
அக் 19, 2025 21:16

ஆச்சர்ய குறியாய் இப்போது கேரளா மாறிவிட்டது..... இங்கு இன்னும் தற்குரியாகவே உள்ளது கல்வி மற்றும் ஆளும்அரசாங்கம் ..


kjpkh
அக் 19, 2025 20:54

எங்க கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்கிறீர்களே. மத்திய அரசு நிதி அனுப்பாமல் இருந்தால் தான் எங்களுக்கு பிளஸ் பாயிண்ட்..நிதி தேவை இல்லை .நிதி தரவில்லை என்று மத்திய அரசு மீது பழி போட்டுக் கொண்டே இருப்போம். அப்பத்தான எங்களுக்கு ஓட்டு கிடைக்கும். புரிஞ்சிட்டீங்களா.


KOVAIKARAN
அக் 19, 2025 20:47

இரண்டில் ஒன்று திருந்தி, மாநில நலனே முக்கியம் என்று மத்திய அரசின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்து இந்திய நீரோட்டத்தில் கலந்து கொண்டது. மற்றொன்று? ம். என்னவென்று சொல்வது? பாவம், தமிழக அரசு பள்ளிகளும் அதன் ஆசிரியர்களும்.


Rameshmoorthy
அக் 19, 2025 20:27

mr Stalin sir, what is your stand sir now


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை