உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றம்

ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்: ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாநில சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் ராஜேஷ் தாக்கல் செய்தார். அவர் பேசியது, மத்திய அரசின் ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்து வதாகும். இது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் மாநில அரசுகளின் அரசியலமைப்பு அதிகாரத்தின் மீதான தாக்குதல் என்றார்.இதை தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒரு நாடு,ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளா எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

bgm
அக் 11, 2024 07:59

இவரை போன்றவர்களை மறுபடியும் ஆட்சி கட்டிலில் அமர்த்திய மாநிலம்...என்னத்த சொல்ல


கண்ணன்
அக் 11, 2024 06:40

சேட்டன்கள் அவ்வப்போது நல்ல ஜோக்கர்கள்! அதும் கம்யூக்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்….!


Kasimani Baskaran
அக் 11, 2024 05:43

பாராளுமன்றத்துக்கு எதிராக எந்த மாநிலம் சட்டம் போட்டாலும் செல்லாது - ஆகவே இந்த அரசை டிஸ்மிஸ் செய்தாலும் கூட தப்பில்லை.


ஆரூர் ரங்
அக் 10, 2024 22:15

நீட் தேர்வுக்கு எதிராகக் கூட சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டது. அது மாதிரியே இதுவும் குப்பை அரசியல்.


Rajasekar Jayaraman
அக் 10, 2024 21:49

பினராயிகதை முடிந்து கம்பி எண்ணும் காலமாகிவிடும் என்ற பயத்தின் வெளிப்பாடு.உன் எதிர்ப்பு எடுபடாது சீன கைகூலியே.


GMM
அக் 10, 2024 21:11

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு விஜயன் குழு எதிர்ப்பு. மாநில பேரவைக்கு தேர்தல் குலுக்கல் முறையில் நடத்து, கால நேரம் பார், நான் சொல்வதை கேள் என்று தீர்மானம் போட அதிகாரம் இல்லை. ஒரே தேர்தல் கூடாது என்றால் எப்படி தேர்தல் நடத்தினால் சிறப்பாக செலவு, கள்ள ஓட்டு குறையும் என்று ஆலோசனை கூற முடியும். மாநில அரசு என்று கிடையாது. மாநில நிர்வாகம். சட்ட விதிகளை அமுல் படுத்துவது தான் வேலை. தேசிய சட்ட விதியை வகுக்க, பகுக்க முடியாது. கூடாது. முதல் கோணம். முற்றும் கோணம்.


nagendhiran
அக் 10, 2024 20:39

எமர்ஜன்சி முன்பு வரை ஒரே தேர்தல் முறைதான் நடந்தது?


rajan
அக் 10, 2024 20:33

Has a State power to stop this. Just to show.


Rajan
அக் 10, 2024 20:26

படத்தில் படிக்கட்டு கலர் பார்த்தாலே புரிந்து விடும்.தங்கக்கடத்தல் கேஸ் என்ன ஆச்சு?


சமீபத்திய செய்தி