உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் 260 பேரை மடக்கி பிடித்த கேரள போலீசார்

ஒரே நாளில் 260 பேரை மடக்கி பிடித்த கேரள போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளாவில், 'ஆப்பரேஷன் சைபர் ஹன்ட்' என்ற பெயரில் மாநிலம் முழுதும் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், சைபர் மோசடியில் ஈடுபட்ட 263 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலோர், கல்லுாரி மாணவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு ஆன்லைன் வேலைவாய்ப்பு, போலி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற சைபர் மோசடிகள் மூலம், பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம், இளைஞர்கள் வாயிலாக வங்கியில் இருந்து எடுத்து தரப்பட்டு, இடைத்தரகர்களுக்கு கைமாறுவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தேடுதல் வேட்டை இதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளில் அதிகளவில் பணம் வரவு வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்த கும்பலை பிடிக்க, கேரளா முழுதும், 'ஆப்பரேஷன் சைபர் ஹன்ட்' என்ற பெயரில் அதிரடி தேடுதல் வேட்டையை போலீசார் சமீபத்தில் மேற்கொண்டனர். எர்ணாகுளம் மாவட் டம் கொச்சியின் மரடு என்ற பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில், போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, வங்கியில் பணம் எடுத்த கல்லுாரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளதாவது: கேரளா முழுதும், 1,000க்கும் மேற்பட்ட போலீசார், ஆப்பரேஷன் சைபர் ஹன்ட் என்ற பெயரில், 800 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 263 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சைபர் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. கைதானவர்களில் பெரும்பாலோர், இளைஞர்கள்; குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள். கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்கு பணப் பரிமாற்றத்துக்காக கொடுத்து உள்ளனர். இதில் ஒருசில மாணவர்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கையாள்கின்றனர். மோசடி கும்பல் இவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் பெரும் தொகையை, காசோலை அல்லது ஏ.டி.எம்., மூலம் எடுத்து, இடைத்தரகர்களுக்கு கொடுத்துள்ளனர். பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கிக் கணக்குகளையும் மோசடி கும்பலுக்கு மாணவர்கள், 'வாடகை' விட்டுள்ளனர். இந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை, பெற்றோருக்கு தெரியாமலேயே மாணவர்கள் எடுத்துக் கொடுத்துஉள்ளனர். இந்த சட்ட விரோத செயல்களுக்காக, குறைந்தது ஆறு மாதங்களிலேயே, 60 - 70 லட்சம் ரூபாய் வரை மாணவர்கள் சம்பாதித்துள்ளனர். இதில் தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் ஈடுபடுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
நவ 03, 2025 09:20

வேலை வாய்ப்பு சூப்பர் ஹை. கேரளாவில் எப்பிடி வறுமை இருக்கும்?


Kasimani Baskaran
நவ 03, 2025 03:53

கணக்குகளை வாடகைக்கு விடுவது கிரிமினல் குற்றம் என்று சட்டமிருந்தால் தவிர இவர்களை தண்டிக்க முடியாது.. ஒருவேளை PMLA மூலம் தண்டிக்கலாம்.


Ramesh Sargam
நவ 03, 2025 00:56

கேரளா என்றால் ஒருகாலத்தில் அதிகம் படித்தவர்கள் மாநிலம் என்ற புகழுடன் இருந்தது. இன்று.... இன்று ஒரே குற்றங்கள், மோசடிகள் செய்பவர்கள் மாநிலமாக மாறி உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் கம்யூனிஸ்ட்ஸ் சித்தாந்தம் உள்ள மாநில அரசு. Gods own country, is now disowned by the same God. Pathetic.


Junior Sankar
நவ 03, 2025 06:34

அங்க அப்படி என்றால் இங்க எப்படி..


சமீபத்திய செய்தி