உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்போனை தராவிட்டால் கொன்றுவிடுவேன்! தலைமை ஆசிரியரை மிரட்டிய மாணவன்; கேரளாவில் அதிர்ச்சி

செல்போனை தராவிட்டால் கொன்றுவிடுவேன்! தலைமை ஆசிரியரை மிரட்டிய மாணவன்; கேரளாவில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு; செல்போனை திருப்பி தராவிட்டால் கொன்றுவிடுவேன் என்று பள்ளி தலைமை ஆசிரியரை மாணவன் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; கேரளாவில் பாலக்காடு அனக்கராவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் செல்போனை கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. பள்ளி விதித்த கட்டுப்பாட்டை மீறி 12ம் வகுப்பு மாணவன் செல்போனை பயன்படுத்தியதாக தெரிகிறது. அதைக் கண்ட வகுப்பாசிரியர் கட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கண்டித்துள்ளார்.இந் நிலையில் சம்பவத்தன்று பள்ளிநேரத்தில் வகுப்பறையில் அதே மாணவன் செல்போனை மீண்டும் உபயோகப்படுத்தியதை ஆசிரியர் கண்டுள்ளார். உடனடியாக அதை பறிமுதல் செய்த அவர், நேராக தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரத்தை கூறி, செல்போனை ஒப்படைத்து உள்ளார். இதையடுத்து, நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மாணவன், அவர் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். பின்னர் செல்போனை திரும்ப தருமாறு கூறி உள்ளான். அவர் மறுக்கவே, கடுமையாக சத்தம் போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறான். இந்த காட்சியை கண்டு அந்த அறையில் இருந்த ஒருவர், தமது செல்போனில் வீடியோவாக படம்பிடித்துள்ளார். அவரையும் மாணவன் மிரட்டிவிட்டு சென்றிருக்கிறான்.இதை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சார்பில் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ameen
ஜன 24, 2025 08:30

நானும் படித்தேன்


Gopalakrishnan Balasubramanian
ஜன 23, 2025 11:51

ஒரு மார்க்கமான மாணவன் என்று வேறோர் செய்தியில் படித்தேன்


aaruthirumalai
ஜன 22, 2025 20:31

ஒழுக்கமற்ற கல்வியும் அறிவும் மிகவும் ஆபத்தானது.


தாமரை மலர்கிறது
ஜன 22, 2025 20:00

நாடு நன்றாக நடக்கும்போது தேவையே இல்லாமல், எதிர்த்து நில், திமிறி எழு, அடங்காதே, ஒடுங்காதே, பொங்கி எழு போன்ற சொற்களை தொடர்ந்து கேட்ட சிறுவன் இப்படித்தான் புரட்சிகரமாக நடந்து கொள்வதாக நினைத்து திமிராக நடப்பான். இப்போது என்ன பிரிட்டிஷ் ஆட்சியா நடக்குது? எதற்கு தேவை இல்லாமல் கம்யூனிஸ்ட்கள் மற்றும் திராவிட கட்சிகள் தொண்டை வற்றும்படி கதறுகின்றன?


R S BALA
ஜன 22, 2025 17:30

செல்போனில் இவர்கள் கற்றுக்கொள்ளாதது மீதம் ஏதும் இல்லை என்ற அளவிற்கு கற்றுத்தேர்ந்து பின் அதற்கு தக நிற்கிறார்கள் இந்த இளம் சிட்டுக்கள் மொட்டுக்கள் இவையெல்லாம் கலியுக அசுரசக்திகள் எந்த பெற்றோர் ஆசிரியர் யாராலும் எதுவும் செய்யமுடியாத அளவிற்கு போதை கொண்டது..


Barakat Ali
ஜன 22, 2025 16:35

திருட்டு திராவிடமும் தமிழனை இப்படித்தான் ஆக்கிவிட்டது .........


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 16:33

சார், சத்தியமா தெரியாம தான் கேட்கிறேன். யாரேனும் சொல்லுங்கள் : "ஒரு பள்ளி மாணவனின் பொறுக்கித்தனத்துக்கும் ஆளும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?" - கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மாநிலம் என்று என்னோட பேன் கிளப் ன் புது மெம்பர் கேக்கறார். நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.


Sivak
ஜன 22, 2025 20:43

அது அரசு பள்ளி ... ஒழுக்கமும் கல்வியும் வளர அரசு தான் நடைமுறைகளை கொண்டு வரணும் ... தனியார் பள்ளி உட்பட ... உனக்கு ஒன்னும் தெரியலைன்னு நல்லாவே தெரியுது ...


தமிழ்வேள்
ஜன 22, 2025 20:46

கட்சி தலைவன் யோக்கியனாக இருந்தால் கட்சி தொண்டன் அயோக்கிய தனம் செய்ய தயங்குவான்..தலைவனும் ஆட்சியாளனும் அடாவடி செய்தால் அவர்களால் ஆளப்படும் குடிமக்கள் சாத்வீகமாகவா இருப்பார்கள்? கம்யூனிஸ்ட் கள் திராவிடம் என இந்த இரு மாநில கட்சி தலைவர்கள் தொண்டர்கள் தறுதலைகளாக இருப்பதால் மக்களும் அவ்வாறே உள்ளனர்... ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரிய சமூகமும் திராவிட கம்மி கும்பலின் தாக்கத்தால் தறிகெட்டு போய்க்கொண்டு இருக்கிறது..யதா ராஜா ..ததா பிரஜா.....


V வைகுண்டேஸ்வரன்
ஜன 22, 2025 16:29

என் மச்சினர், M Com., M Ed., முடித்து, ஆசிரியர் வேலை கிடைத்தும் சேராமல் ஐ டி கம்பெனியில் சேர்ந்து விட்டான். அவனை 11ஆம் வகுப்பு மகளிர் செக்ஷனில் போட்டார்கள். பத்தே நாளில் ஓடியே வந்துட்டன்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 22, 2025 14:47

ஒரு விதத்தில் பாராட்டலாம். சொன்னதோடு நிறுத்திக்கொண்டான். சென்னையில் ஆசிரியை ஒருவரை மாணவன் கத்தியால் குத்திக் கொன்றது நினைவுக்கு வருகிறது.


வாய்மையே வெல்லும்
ஜன 22, 2025 14:33

பள்ளிச்சிறுவன் செல்லாது உன்னோட திமிரு ஜவாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை