மற்றொரு புத்தாண்டும் பிறக்க உள்ளது. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், தடையில்லா மின்சாரம் என அளித்த வாக்குறுதிகள் என்னாச்சு? நம்பக்கூடிய அளவுக்கு பெரிய பொய்யை சொல்வதில் பா.ஜ., வினர் கில்லாடிகள் என்பது மக்களுக்கு தெரியும்.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்மக்கள் நம்பிக்கை!
ராமர் கோவில் மக்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதனால், இதை அரசியல் பிரச்னையாக பார்க்க முடியாது. தற்போது வீட்டில் இருந்து இயங்கும் சில அரசியல் தலைவர்கள், நிரந்தரமாக வீட்டிலேயே முடங்குவர்.ஏக்நாத் ஷிண்டே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனாஓட்டுரிமை போய்விடும்!
பார்லிமென்டில் யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என்பதில், பா.ஜ., உறுதியாக உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்றால், மக்களின் ஓட்டுரிமை பறிக்கப் படும். ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்.அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி