வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குற்றத்தை தூண்டச் செய்த ரீல்ஸ் apps களை தடை செய்வதை விட்டுவிட்டு மக்களை தண்டிப்பது நியாமா சாமி. .
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
பஹ்ரைச்: உத்தர பிரதேசத்தில் உயர்தரமான, 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில் இளைஞரை கொன்று அவரது, 'ஐபோனை' இரு சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் அருகேயுள்ள நாகூரை சேர்ந்தவர் சதாப்,19. பெங்களூரில் வசித்து வந்த இவர் தன் தாய் மாமா திருமணத்துக்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி மாயமானார். போலீசார் தேடியபோது ஊருக்கு அருகேயுள்ள கொய்யா தோட்டத்தில் சதாப் கழுத்து அறுபட்டு, முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக நேற்று, 14 மற்றும் 16 வயதுள்ள இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.சம்பவம் குறித்து சிறுவர்கள் இருவரும் அளித்த வாக்குமூலம்: சமூக வலைதளத்தில் உயர்தரமான, 'ரீல்ஸ்' எடுத்து பதிவிட விரும்பினோம். இதற்கு எங்களுக்கு, 'ஐபோன்' தேவைப்பட்டது. அப்போது தாய்மாமா திருமணத்துக்கு வந்திருந்த சதாப்பை குறிவைத்தோம். 'ரீல்ஸ்' எடுக்கலாம் எனக்கூறி அவரை ஊருக்கு வெளியே உள்ள கொய்யா தோட்டத்துக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் வைத்திருந்த ஐபோனை பறித்து கொண்டு அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். பின் முகத்தை செங்கல்லால் தாக்கி சிதைத்தோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து ஐபோனை பறிமுதல் செய்த போலீசார், சிறுவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தியை மறைக்க உதவிய உறவினர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களும் கோண்டாவில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.'ரீல்ஸ்' எனப்படும், சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படங்களை எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிடுவது இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. இந்த ரீல்ஸ் மோகம் ஒரு உயிரை பறித்தது மட்டுமின்றி, இரு சிறுவர்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளது.
குற்றத்தை தூண்டச் செய்த ரீல்ஸ் apps களை தடை செய்வதை விட்டுவிட்டு மக்களை தண்டிப்பது நியாமா சாமி. .
24-Jun-2025