உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போட்டியிட மீண்டும் அழுத்தம் கிருஷ்ணபைரே கவுடா சலிப்பு

போட்டியிட மீண்டும் அழுத்தம் கிருஷ்ணபைரே கவுடா சலிப்பு

தட்சிண கன்னடா: ''எக்காரணம் கொண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என தலைவர்களிடம் தெளிவாக தெரிவித்து விட்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பது சரியல்ல,'' என, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். எனவே, இம்முறை எக்காரணம் கொண்டும் போட்டியிட மாட்டேன் என கட்சி தலைவர்களிடம் தெளிவாக கூறிவிட்டேன்.யார் போட்டியிடுவர் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு செய்வர். அமைச்சர்கள் போட்டியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். போட்டியிட கூறி, மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பது சரியல்ல.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ