உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலற்ற நிர்வாகம் அமைய கே.ஆர்.எஸ்., கட்சி அழைப்பு

ஊழலற்ற நிர்வாகம் அமைய கே.ஆர்.எஸ்., கட்சி அழைப்பு

பாகல்கோட்: ''ஊழலற்ற நிர்வாகம் அமைய, கே.ஆர்.எஸ்., கட்சிக்கு ஆதரவு தாருங்கள்,'' என்று, அக்கட்சியின் தலைவர் ரவிகிருஷ்ணா ரெட்டி கோரிக்கை விடுத்து உள்ளார்.கே.ஆர்.எஸ்., எனும் கர்நாடகா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில், தாவணகெரேயில் நேற்று தொண்டர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவிகிருஷ்ணா ரெட்டி பேசியதாவது:கர்நாடகா, சில அரசியல்வாதிகளின் குடும்பத்தின் வசம் உள்ளது. மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, பரிசு பொருட்களாக மக்களுக்கே திருப்பி தருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் பரிசு பொருட்கள் வினியோகம் செய்தது தொடர்பாக, சில கட்சிகளின் தலைவர்கள் மீது, நாங்கள் புகார் அளித்தோம்.இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.கர்நாடகாவின் மான்செஸ்டராக இருந்த தாவணகெரே தற்போது இரண்டு, மூன்று குடும்பங்கள் கையில் உள்ளது. இங்கு சரியான அரசு மருத்துவமனை கூட இல்லை. அவசர சிகிச்சைக்காக ஷிவமொகா செல்ல வேண்டி உள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை வழங்க, அடுத்த சட்டசபை தேர்தலில், கே.ஆர்.எஸ்., கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கிறேன்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ