உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமி காலில் விழுந்து பா.ஜ., - எம்.பி., நன்றி

குமாரசாமி காலில் விழுந்து பா.ஜ., - எம்.பி., நன்றி

பிடதி: தனக்கு ஆதரவாக நின்ற முன்னாள் முதல்வர் குமாரசாமி காலில் விழுந்து, மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா நன்றி தெரிவித்தார்.பார்லிமென்ட் கட்டடத்தில், கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி நான்கு இளைஞர்கள் அத்துமீறி செயல்பட்டது நாட்டையே உலுக்கியது. அவர்களுக்கு, மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து, பார்லிமென்டுக்குள் செல்ல அனுமதி பாஸ் வழங்கப்பட்டது.இதனால், நாடு முழுவதும் அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு ஆதரவாக, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசினார்.இதையடுத்து, ராம்நகர் மாவட்டத்தின் பிடதியில் உள்ள குமாரசாமி வீட்டுக்கு, பிரதாப் சிம்ஹா நேற்று வந்தார். தனக்கு ஆதரவாக பேசியதற்காக, அவரது காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.இது தொடர்பாக, 'எக்ஸ்' வலை தளத்தில், ''கஷ்ட காலத்தில் மக்கள் முன்னிலையில் உண்மையை விளக்கி, எனக்கு ஆதரவாக நின்ற குமாரசாமிக்கு நன்றி கூறினேன்,'' என, அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை