மேலும் செய்திகள்
தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?
1 hour(s) ago | 2
பெங்களூரு : ''லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட மாட்டார்,'' என ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மாண்டியாவில் யாரை வேட்பாளராக்க வேண்டும் என்பது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த தொகுதியில் நானே போட்டியிடும்படி, தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அல்லது குமாரசாமி, நிகிலோ களமிறங்க வேண்டும் என, நெருக்கடி கொடுக்கின்றனர்.குமாரசாமி ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர். அவர் சட்டசபை உள்ளேயும், வெளியிலும் போராட வேண்டும். எனவே, அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார். அவர் களமிறங்குவதாக வதந்தியை உருவாக்கி உள்ளனர்.மாண்டியா மாவட்டத்தின், அனைத்து சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, கருத்து சேகரிப்பேன். வேட்பாளரை முடிவு செய்த பின், கூட்டணி கட்சி தலைவர்களிடம் தெரிவிப்பேன். தொகுதியில் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை, குமாரசாமியிடம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 2