உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி; 1,400 பேரிடம் கேரளாவில் கிடுக்கிப்பிடி விசாரணை

குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி; 1,400 பேரிடம் கேரளாவில் கிடுக்கிப்பிடி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: குவைத்தில் உள்ள வங்கியில் ரூ.700 கோடி மோசடி செய்த, கேரளாவை சேர்ந்த 1400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குவைத் சுகாதார அமைச்சகத்தில் நர்ஸ்களாக கேரளாவை சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு பணம் தேவைப்படும் போது எல்லாம், சம்பள ஆதாரத்தை கொடுத்து, குவைத்தில் உள்ள வளைகுடா வங்கியில் கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் சிறிய கடன்களை வாங்கி, குறிப்பிட்ட தேதிகளில் திரும்ப செலுத்தி வங்கியில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். அதன் பிறகு பெரிய அளவிலான கடன் தொகையை பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் தப்பிவிட்டனர். மூன்று மாதங்களுக்கு முன் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியில் கடன் வாங்கியவர்களின் விவரங்கள் உள்ளது. வளைகுடா வங்கியின் துணை பொது மேலாளர் கேரளா சென்று, சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏ.டி.ஜி.,பியிடம் புகார் அளித்தார். கடன் வாங்கியவர்களின் விவரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நபர்களிடம் கேரளாவில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 1400 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடிக்குப் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 20:56

இதுதான் அவர்களின் லிட்டரசி


vadivelu
டிச 07, 2024 15:53

தவறு செய்து இருந்தால் உங்க சட்டப்படி தண்டனை கொடுத்துடுங்க .ஆளுக்கு 1000 சவுக்கடி


Indian
டிச 07, 2024 14:19

பிறவி குணம் , வளைகுடா நாடு வரை எதிரொலிக்குது ...


Perumal Pillai
டிச 07, 2024 14:07

Kerala is fast becoming another Pakistan if not Bangladesh, under the senile Vijayan.


Ramesh Sargam
டிச 07, 2024 12:59

இங்கு மோசடி செய்தது போதாது என்று அங்கு போயும் உங்க கை வரிசையை காட்டீட்டீங்களே…


Tiruchanur
டிச 07, 2024 12:52

மெத்த படித்த மாகாணம் கேரளா. என்ன ப்ரயோஜனம்?


Narasimhan
டிச 07, 2024 12:27

ஸ்த்ரீகள் செய்யும் வேலை இது அல்ல சார். குடிகார புருஷன்மார் செய்யும் வேலைதான் இது.


Hajamohaideen T
டிச 07, 2024 12:18

Many of our Peoples do not repay the money like this...and then face many problems.


சுலைமான்
டிச 07, 2024 12:07

என்ன சேச்சிகளா இது? தமிழ்நாட்டுகாரன தான் கேரளா காரன் ஏமாத்துறான்.... எங்க போயி பாய்களையும் விடலையா?


Palanisamy Sekar
டிச 07, 2024 11:59

வங்கிகளுக்கும் பேராசை. அதனை பயன்படுத்திக்கொண்டார் அங்கே பணிபுரிந்தவர்கள். இங்கே சொத்துக்களை குடும்பத்தினர் பெயரில் இருப்பதால் வங்கிகளால் அதனை கையகப்படுத்த கூட முடியாது. பாஸ்போர்ட்டில் உள்ள விலாசமெல்லாம் மாறியிருக்கும். அல்லது அதே நபர் வேறு நாட்டில் பணிபுரிய சந்தர்ப்பம் உண்டு. கோர்ட்டுக்கு சென்றால் மாதம்தோறும் சில ஆயிரம் வரைதான் கொடுக்க முடியும் என்று முறையிட்டால் கோர்ட் அதனை ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவரும். மொத்தத்தில் பணம் வாங்குவதற்குள் வங்கி திவாலாகிவிடும்.


சமீபத்திய செய்தி