புதுடில்லி: பிரதமர் மோடி, கடந்த 2ம் தேதி, லட்சத்தீவு பயணம் குறித்த தனது அனுபவத்தை புகைப்படங்களாக ‛எக்ஸ்' வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லட்சத்தீவு மக்களுடன் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தீவுகளின் பிரம்மிக்க வைக்கும் அழகையும், மக்களின் நம்ப முடியாத அன்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். அகாடி, பங்காராம் மற்றும் கவரட்டி பகுதி மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிறந்த விருந்தோம்பல் அளித்த லட்சத்தீவு மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறி சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.மேலும், சில பதிவுகளில் பிரதமர் கூறியுள்ளதாவது:பிரதிபலிப்பு
வளர்ச்சி மூலம், லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு கவனம் செலுத்துகிறோம். எதிர்கால உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், சிறந்த சுகாதாரம், வேகமான இணையம் மற்றும் குடிநீர் வசதிகளை உருவாக்குவதுடன், உள்ளூர் கலாசாரத்தைப் பாதுகாத்து கொண்டாடுவதும் ஆகும். இந்த உணர்வை, அங்கு துவக்கப்பட்ட திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.ஊக்கம்
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பலனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். இதனால் கிடைத்த ஆரோக்கியம், தன்னம்பிக்கை, பெண்கள், அதிகாரம், மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் ஆகியவற்றை நேரடியாக பார்ப்பது ஊக்கம் அளிக்கிறது.உத்வேகம்
லட்சத்தீவின் இயற்கை அழகுடன், அந்தத்தீவின் அமைதியும் மனதை மயக்கும். 140 கோடி மக்களின் நலனுக்காக இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது.சாகசம்
தங்களுக்குள் உள்ள சாகசங்களை வெளிப்படுத்த விரும்புபவர்களின் பட்டியலில் லட்சத்தீவு இருக்க வேண்டும். நான் அங்கு தங்கியிருந்த போது, நீருக்கு அடியில் நீந்திப்பார்த்தேன். இது ஒரு உன்னதமான அனுபவம்.சிறந்த தருணங்கள்
அழகிய கடற்கரைகளில் அதிகாலை நடைபயிற்சியில் கிடைத்த பேரின்பமும் நினைவில் இருக்கும் தருணங்களாக இருக்கும்.உற்சாகம்
லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டம் மட்டும் அல்ல. இது ஒரு காலமற்ற பாரம்பரிய மரபு மற்றும் அதன் மக்களின் உற்சாகத்திற்கு சான்று ஆகும். இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.Gallery