உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனிதத்தை பாதுகாக்கணும்!

புனிதத்தை பாதுகாக்கணும்!

புனிதத்தை பாதுகாக்கணும்!திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனை அளிக்கின்றன. இந்த கலப்பட பிரச்னை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் நம் மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்.-ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

மாதத்துக்கு ஒரு கோடி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு, பக்தர்கள், அரசியல்வாதிகள் என, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு 1 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பிரதமர், கவர்னர் அல்லது மத்திய அமைச்சர்களை, ஆந்திர முதல்வர் சந்திக்கும் போது, சுவாமி சிலை, தேவஸ்தானம் முத்திரையிடப்பட்ட சால்வை, காலண்டர், லட்டு உள்ளிட்டவற்றை வழங்குவது வழங்கும். கடந்த 2019 - 2024 மே வரை, முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடியை சந்திக்க டில்லி செல்லும் போதெல்லாம், லட்டு, சால்வை, சிலை உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார். உ.பி.,யின் அயோத்தியில், கடந்த ஜனவரியில் திறக்கப்பட்ட ராமர் கோவிலுக்கும் ஒரு லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ