உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய குடிமக்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதற்கான விதிகளை கடுமையாக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு, சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.இது தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம், நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்திய குடிமக்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து மோசடி நடக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. இந்த திருமணங்கள் ஏமாற்றும் வகையில் மாறி, குறிப்பாக பெண்களை ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் முறை அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால், இந்திய குடிமக்கள் - வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையிலான திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும். விவாகரத்து, துணையை பராமரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது,நிர்வகிப்பது, சம்மன், வாரண்ட், நீதித்துறை ஆவணங்கள் அனுப்புவது தொடர்பாக புதிய சட்டத்தில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். இது போன்ற திருமணங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Akash
பிப் 17, 2024 02:34

other countries also should impose background checks for the boy or girl from India before registering their wedding abroad


anon
பிப் 17, 2024 00:08

மொதல்ல இந்திக்குள்ள domestic violence, abuse, marital rape இத பாருங்கடா


RAJ
பிப் 16, 2024 23:51

Good . Better to. make it for all including Nris


வெகுளி
பிப் 16, 2024 18:38

சரியான நகர்வு... அப்பாவி பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்...


Saivaraj Vijay
பிப் 16, 2024 18:10

வரவேற்கத்தக்க செயல் ????????


Saivaraj Vijay
பிப் 16, 2024 18:10

வரவேற்கத்தக்க செயல் ????????


GMM
பிப் 16, 2024 18:08

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவை விட்டு பிற நாடுகளில் குடியுரிமை பெறும் முன் அவரது கல்வி, பாதுகாப்பு, நிர்வாக செலவை வசூலிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள சொத்தை மத்திய அரசிடம் மட்டும் விற்க வேண்டும். ஆண் பிறப்பு பதிவு மாவட்டத்தில் திருமண பதிவு. தாவா ஆரம்பத்தின் அடுத்த நாளே மாத ஜீவனாம்சம் குடியுரிமை கொடுக்கும் நாடு இந்திய அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். திருமண முறிவு நீதிமன்றத்தில் கூடாது. ( நிறையாக பொதுநல வழக்கு விசாரிக்க வேண்டி உள்ளது. ஆயுள் முடிந்து விடும்.) 3 மாதத்தில் மாவட்ட ஆட்சியர் சமரசம் செய்து தான் பிரிய வேண்டும். பெண் பிற ஆண் நட்பு பெறலாம் / திருமணம் செய்யலாம். ஜீவனாம்சம் உடன் ரத்து. குழந்தைக்கு பின் தாவா என்றால் இருவரும் பெற்றோர்கள், குழந்தை பராமரிப்பு செலவுகளை அரசு மூலம் கொடுக்க வேண்டும். மீறினால் அரசு, தனியார் வேலையில் இருந்து நீக்கம். சுய தொழில் முடக்கம். உடல் உழைப்பு வாழ்க்கைக்கு மட்டும் அனுமதி. or சிறை.


Duruvesan
பிப் 16, 2024 18:05

அப்போ NRI எல்லாம் கேடு கெட்டவனா? என்னங்கடா ரீல் இது


அப்புசாமி
பிப் 16, 2024 16:59

உள்ளூரில் கல்யாணம்.பண்ணிக்கிட்டு ஏமாத்துறவங்களை ஒண்ணும் பண்ண முடியலை.


Senthoora
பிப் 16, 2024 20:23

சொன்னாலும் சொன்னீங்க, ஞாயமா சொன்னீங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை