உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு

பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, ​​அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது'' என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: வக்ப் திருத்தச் சட்டம் குறித்த முழுமையான விசாரணைக்குப் பிறகு இன்று சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சுப்ரீம்கோர்ட்டிற்கு முழு விஷயமும் தெரியும். மத்திய அரசு வழக்கறிஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை சுப்ரீம்கோர்ட்டில் விரிவாக முன்வைத்துள்ளார். அதன்படி ஜனநாகத்திற்கு மிகவும் நல்ல முடிவை சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ளது. எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, ​​அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் திருப்தி அடைகிறேன். பீஹார் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸும், ஆர்ஜேடியும் செய்து வரும் மிகவும் கீழ்த்தரமான அரசியலால் நாங்கள் அனைவரும் வருத்தப்படுகிறோம். குறிப்பாக, அவர்கள் பல ஆண்டுகளாக பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்கி, துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். ஆனால் பிரதமரின் தாயார் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் விமர்சனத்தால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 01:38

ஆமாம் உச்ச நீதிமன்றம் ,”இவன் ரொம்ப நல்லவன்” ன்னு சொல்லி மூக்குலேயே குத்தியிருக்கு


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 01:35

உங்க பார்லிமெண்ட் இயற்றிய தேர்தல்நிதி பத்திர மசோதா ஒரு மோசடி மசோதா, அரசியல்சாசனத்துக்கு புறம்பானது ன்னு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது ஞாபகம் இருக்கிறதா?


சண்முகம்
செப் 16, 2025 01:24

As long as it does not violate the Indian Constitution...


Tamilan
செப் 15, 2025 20:25

சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்க முடியும் . ஆனால் மூர்க்கர்களுடன் சண்டையிட விரும்பவில்லை . மோடியைப்போல் அனைவரும் அன்னக்காவடிகள் இல்லை . அனைவருக்கும் குடும்பம் நாடு உலகம் என்ற அக்கறை உள்ளது. அவர்களால் மோடியைப்போல் மதவாத கும்பலைப்போல் தான்தோன்றித்தனமாக செயல்படமுடியாது . ஒரு மரியாதை நிமித்தமாக அரசை சாடவில்லை


Tamilan
செப் 15, 2025 20:23

பார்லி என்பது இந்துமதவாதிகளின் சொத்தல்ல . திராவிட அரசு வரும்போது அதை நீக்கும், திருத்து அல்லது இந்து மதவாத சொத்துக்களையும் உடன் சேர்க்கும் . நிறைய உளறவேண்டாம் . பிதற்றிக்கொள்ளவேண்டாம் .


Abdul Rahim
செப் 15, 2025 19:26

மூக்கடிபட்டு வீங்கி பொடச்சு போயி கெடக்கு ஆனாலும் ஆவாரம்பூ கவுண்டமணி மாதிரி அடி படாத மாதிரியே ஆக்டிங் கொடுகுக்குது உச்சநீதிமன்றம் முக்கிய சதித்திட்ட சரத்துகளை நீக்கி கரியை பூசினதை எப்படிலாம் சமாளிக்குது பாருங்க.


சிட்டுக்குருவி
செப் 15, 2025 17:25

அப்படி இயற்றப்படும் சட்டம் அரசியலமைப்பு சட்டங்களை மீராமல் இருப்பதும் அவசியம் .அப்படி மீறும் பட்சத்தில் இயற்றப்படும் சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரிக்கமுடியும் .


sankaranarayanan
செப் 15, 2025 17:14

2015இல் இதே உச்ச நீதி மன்றம்தான் நாடாளுமன்றம் இரு அவைகளினால் நிறைவேற்றி பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் தேர்வு குழு மசோதாவை நிராகரித்தது என்பதை கேட்கவே மனது வேதனை படுகிறது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை எப்படி மாற்றி அமைக்கமுடியும் நாட்டு மக்களின் உயிர்-உடல் எல்லாமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள்தான் எந்த நாட்டிலும் இல்லாத நடவடிவக்கை இங்கே மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்துள்ளது இதை மாற்றி அமைக்க வேண்டும் மக்களின் மசோதாவே எம்பிக்கள் மூலமாக நாட்டில் நடைமுறையில் இருக்க வேண்டும்


Anbuselvan
செப் 15, 2025 15:22

2015இல் இதே உச்ச நீதி மன்றம்தான் நாடாளுமன்றம் இரு அவைகளினால் நிறைவேற்றி பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு, தற்போதைய கொலிஜியும் முறையை மாற்றி தேசிய நீதிபதிகள் தேர்வு குழு மசோதாவை நிராகரித்தது நினைவில் கூற விரும்புகிறோம்.


visu
செப் 15, 2025 17:12

அவங்களுக்கு அவங்களே வேலை அளித்து ஊதியம் நிர்ணயபரிந் த்துறைகள் செய்துகொள்வது உலகத்திலேயே உச்சநீதிமன்றம் மட்டுமே


Iyer
செப் 15, 2025 15:12

பாராளுமன்றதில் இயற்றபடும் சட்டத்தை நீதிமன்றங்கள் விசாரணைக்கே எடுத்துக்கொள்ள முடியாது.


புதிய வீடியோ