உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை

புதுடில்லி: நக்சலைட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சுக்மாவின் படேசெட்டி பஞ்சாயத்தில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர், இதன் காரணமாக இந்த பஞ்சாயத்து முற்றிலும் நக்சல் இல்லாததாக மாறியுள்ளது.மேலும், 22 நக்சலைட்டுகள் சுக்மாவில் சரணடைந்தனர், மொத்த சரணடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போராடும் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் சத்தீஸ்கர் போலீசாரை நான் வாழ்த்துகிறேன்.மறைந்திருக்கும் நக்சலைட்டுகள் மத்திய அரசின் சரணடைதல் கொள்கையை ஏற்று, கூடிய விரைவில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன்னர் நக்சலிசத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

thehindu
ஏப் 19, 2025 09:03

தீவிரவாதிகளுடன் சேர்ந்து இப்படி நாடகமாடாமல் உடனடியாக பதவி விலகவேண்டும்


thehindu
ஏப் 19, 2025 08:57

தினமலரும் பாஜவும் புகலிடம்


vivek
ஏப் 19, 2025 11:27

அப்போ எதுக்கு இங்கே பிச்சை எடுகுறே...


thehindu
ஏப் 19, 2025 08:25

பாஜவில் இந்துமதவாத அரசில் தீவிரவாதிகள் சேர்ப்பு ஆள் எடுப்பு மிக தீவிரம் அடைந்துள்ளது . நாடு உழுவதும் உள்ள எதிர்கட்சிகளை தீர்த்துக்கட்ட


Barakat Ali
ஏப் 18, 2025 21:35

இதே போல திமுகவுக்கும் ஒரு காட்டு காட்டுங்க சேட்டு ....


மீனவ நண்பன்
ஏப் 18, 2025 21:15

இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலும் முதியோர்கள் வசிக்கின்றனர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் ராய்ப்பூர் போன்ற நகரங்களுக்கு சென்றுவிட்டனர் பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகள் நக்சலைட்களாக வழிப்பறி நடத்துகிறார்கள்


Ramesh Sargam
ஏப் 18, 2025 20:56

அவர்களே போட்டால் நல்லது. இல்லையென்றால் வேறு விதத்தில் பிடுங்கப்படவேண்டும்.


முக்கிய வீடியோ