உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எச்சரிக்கை மணி அடிக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சொல்கிறார் பினராயி விஜயன்

எச்சரிக்கை மணி அடிக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: சொல்கிறார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. தோல்வி குறித்து விரிவாக ஆராயப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.கேரளாவில் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆளும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணிக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் மேயர் தேர்தலில் பாஜ கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது.ஆளும் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தேர்தலில் இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி, பெருவெற்றியை எதிர்பார்த்தது. ஆனால் அந்த முன்னேற்றத்தை அடைய முடியவில்லை. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம். வகுப்புவாத சக்திகளின் தவறான தகவல், பிளவு தந்திரங்களுக்கு மக்கள் பலியாகி விடாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக விழிப்புணர்வு தேவை என்பதற்கான எச்சரிக்கையாக தேர்தல் முடிவுகள் உள்ளன.அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதின் அவசியம், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் அடிக்கோடிட்டு காட்டப்பட்டு உள்ளது. மக்களின் ஆதரவுடன் முன்னேற, இடதுசாரிகள் ஜனநாயக முன்னணியானது விரிவாக விவாதித்து, முடிவுகளை எடுக்கும். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த மக்கள் ஆதரவை மேலும் வளப்படுத்தவும், அதன் அடிப்படையை பலப்படுத்தவும் உறுதியுடன் செயல்படுவோம்.இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SUBBU,MADURAI
டிச 13, 2025 22:01

Historic moment! Keralas capital welcomes its first-ever BJP Mayor, ending a 30-year CPM era in Thiruvananthapuram. R Sreelekha.


Sun
டிச 13, 2025 21:23

பி.ஜே.பி எதிர்ப்புக்காக வெளிமாநிலங்களில் இண்டி கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்ப்பது! உள்ளூரில், கேரளாவில் காங்கிரசை எதிர்ப்பது! இப்படி இரட்டை நிலையை மார்க்சிஸ்ட் தொடர்ந்து கடைபிடித்தால் மற்றும் டில்லியில் காங்கிரஸ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மார்க்சிஸ்ட்டும் சேர்ந்து ஜால்ரா தட்டினால் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் வெளியேற்றப்பட்டு களம் திரிணாமுல் , பி.ஜே.பி. என மாறியதைப் போல கேரளாவிலும் மார்க்சிஸ்ட் வெளியேற்றப்பட்டு களம் காங்கிரஸ், பி.ஜே.பி என மாறிவிடும். இந்த உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட்டுகளுக்கான ஒரு எச்சரிக்கை மணி!


Sivasankaran Kannan
டிச 13, 2025 21:30

இது இந்த கம்யூனிஸ்ட்களுக்கு தேர்தல் சாவு மணியாக மாற எல்லாம் வல்ல இறைவனையும், பரம பிதாவையும் வேண்டுவோம்.


பாரதி
டிச 13, 2025 21:03

சபரி மலையை அவமதித்தீர்கள் அல்லவா அவ்வளவுதான் செத்துப் போயாச்சு சமாதி கட்டலாம் இனி ஒன்னும் பயப்படாதீங்க உங்களுக்கு பக்கத்துல காங்கிரஸ் சமாதியும் துணையாக வந்துவிடும்


govind
டிச 13, 2025 20:31

இடதை இடக்கையில் புறம் தள்ளிய கேரள மக்கள்.வாழ்த்துக்கள் மக்களுக்கும் பா.ஜவுக்கும்.


ஆரூர் ரங்
டிச 13, 2025 19:57

மணியல்ல. சங்கு.


M.Sam
டிச 13, 2025 19:55

அவரு சொல்வதில் என்ன தரு ? அப்பு நிச்சயம் புரியாத ஜென்மங்களுக்கு மட்டும்


vivek
டிச 13, 2025 20:26

ஏல சாமு, உண்டி கட்சிக்கு கூட முட்டு குடு...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 13, 2025 20:42

காங்கிரஸ் வகுப்பு வாத சக்தி என்று பிணராய் சொல்வது 100% உண்மை


Yaro Oruvan
டிச 13, 2025 19:47

ஸ்வாமியே சரணம் அய்யப்பா.. ஜைஹிந்


புதிய வீடியோ