உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி.,யில் ஒலிக்கட்டும்: ராகுல்

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி.,யில் ஒலிக்கட்டும்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த ராகுல், ' தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் பார்லிமென்டில் ஒலிப்பதை உறுதி செய்வோம்' என்றார்.டில்லியில் நேற்று (ஜூன் 25) நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'லோக்சபாவில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.ஸ்டாலினின் வாழ்த்து செய்திக்கு ராகுல் நன்றி தெரிவித்தார். அதில், ''நன்றி, அன்பு சகோதரர் ஸ்டாலின் அவர்களே.. தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவின் ஒவ்வொரு குரலும் பார்லிமென்டில் ஒலிப்பதை உறுதி செய்வோம். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்'' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 26, 2024 23:39

முதலில் மேற்கில் இருக்கும் கர்நாடக, கேரளாவில் இருந்து, காவிரியில், முல்லை பெரியாற்றில் தண்ணீர் கொடுக்கட்டும், பிறகு வடக்கு பேசலாம். அதற்க்கு வாய் இருக்கிறதா?


theruvasagan
ஜூன் 26, 2024 23:19

மைக் டெஸ்டிங். ஒன் டூ த்ரி. ஹலோ. ஹலோ. நாங்க பேசறது நல்லா கேக்குதா. பேசப் போறது இவ்வளவுதான். அதுக்கு இம்புட்டு பில்டப்பு.


Barakat Ali
ஜூன் 26, 2024 21:40

குரல் ஒலிக்கட்டும் ?? அதாவது பாஜக கூட்டணி அரசை செயல்பட விடாமல் கூச்சல், குழப்பம், அநாகரிக நடவடிக்கைகள் மூலம் சபையை முடக்குதல் ...... இதுக்கா தமிழன் ஓட்டு போட்டான் ????


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:06

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் பார்லி., கேன்டீனில் ஒலிக்கட்டும்.


sankaranarayanan
ஜூன் 26, 2024 20:35

கூட்டுக்களவாணிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக நாட்டை கொள்ளை அடிக்கலாம் என்ற சந்தோசம் நாடு முன்னேற அல்ல தங்களது வாரிசு முன்னறினால் போதும் என்ற கொள்கைக்காக பாடுபட்ட உத்தமர்கள்.


Kishore Kumar Chari
ஜூன் 26, 2024 20:30

Two jokers fooling indians.


M Ramachandran
ஜூன் 26, 2024 20:28

என்ன இருந்தாலும் தமிழ் நாட்டு தலிவரின் திறமைக்கு முன்னாள் உங்கள் திறமை ஸீரோ


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:18

ஆமாம் .... கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் உதாரணம் ....


S. Narayanan
ஜூன் 26, 2024 20:15

ஏற்கனவே திமுகவில் 40 தூங்குமூஞ்சி இருக்கு. இது 41 வது தூங்குமூன்சி


M Ramachandran
ஜூன் 26, 2024 20:14

நல்ல கூட்டு 1+1 கூட்டம்


அருணாசலம்
ஜூன் 26, 2024 19:35

சுடலை முகம் போட்டோவில் புடைப்பா இருக்கிறது ‌


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை