உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு: முன்னாள் பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளருக்கு ஆயுள் தண்டனை

பாக்., ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு: முன்னாள் பிரம்மோஸ் ஏவுகணை பொறியாளருக்கு ஆயுள் தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்தியாவின் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் திட்டத்தின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் பொறியாளராக இருந்தவர் நிஷாந்த் அகர்வால். இவர் கடந்த 2018ம் ஆண்டு பிரம்மோஸ் ஏவுகணை குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடைபெற்று வந்தது.விசாரணையில், பாகிஸ்தானின் உளவுத்துறை ஏஜென்ட்களால் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டதாக கூறப்படும் நேஹா ஷர்மா மற்றும் பூஜா ரஞ்சன் ஆகிய இரண்டு பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணை பற்றிய ரகசிய தகவல்களை உளவு பார்த்தது தெரியவந்தது. இதில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிஷாந்த் அகர்வாலுக்கு, நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

KARTHIKEYAN V SEEKARAJAPURAM
ஜூன் 04, 2024 04:31

நாட்டையே காட்டி கொடுக்கிற துரோகி.


பகுத்தறிவு
ஜூன் 03, 2024 22:15

குற்றவாளியின் பெயர் ஹைதர்அலின்னு இருந்திருந்தா neethiமன்ram விடுதலையே பண்ணியிருக்கும்...


பாரதி
ஜூன் 03, 2024 22:12

இத்தனை ஆண்டுகள் வெள்ளையன் செய்த கல்வித் திடத்தின் மூலம் உருவாகும் உத்தமபுத்திரர்கள்!!


saravanan
ஜூன் 03, 2024 22:09

நடு தெருவில் ஓட விடணும்....


Kasimani Baskaran
ஜூன் 03, 2024 21:23

தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும்.


Radhakrishnan Seetharaman
ஜூன் 03, 2024 21:03

பெண்ணா? தாய் மண்ணா? என்று வரும் போது பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் ?‍♂️


RAJ
ஜூன் 03, 2024 20:05

தாய்மண் பற்று இல்லாத எவனும் இந்தியநாட்டில் வசிக்க தகுதி இல்லாதவன்.. வெளியே ஓடு... மணிசங்கரும் தான்...


SUBBU,MADURAI
ஜூன் 03, 2024 20:04

நம் நாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எத்தனை பேர் முழுவதுமாக தங்கள் ஆயுளை சிறையில் கழித்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகவே இவனைப் போன்ற தேச துரோக குற்றவாளிகளுக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து அதை உடனே நிறைவேற்ற வேண்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 03, 2024 19:37

பாகிஸ்தானுக்கு என்று சொந்த மூளை கிடையாது. எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் பாகிஸ்தானுக்கு அணுகுண்டு ரகசியத்தை கடத்தி அவர்களுக்கு துணை புரிந்திருக்கின்றனர். அப்துல்கலாம் போன்ற நம்முடைய பல விஞ்ஞானிகளுக்கும், நமது நாட்டிற்கும் துரோகம் செய்தது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நிறைய நடந்துள்ளன. இன்னமும் பாகிஸ்தான் திருந்துவதாக இல்லை. நம்முடைய நிலவுப் பயணம், ராக்கெட், ஏவுகணை மற்றும் செயற்கைக்கோளின் தொழில்நுட்பங்களை திருடத் தான் மத்தியில் காங்கிரஸ் அரசு வர வேண்டும் என்று அந்த நாடு நினைக்கிறது.


M Ramachandran
ஜூன் 03, 2024 19:32

பாகிஸ்தான் பொறுக்கிகள். சுய சிந்தனையற்ற சும்ம பிரியானையாய் திண்ணுட்டு ஊர் வம்பிற்கு அலையும் புராணிகள் ஊரான் வீட்டில் பின் கட்டில் கிடைய்யப்பதை உண்னும் பிராணிகள் சொந்த புத்தி இல்லாமல் திருடி எத்தி திரியும் ஜென்மங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை