உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள்

குழந்தையை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள்

பிரோசாபாத்: உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், ஜூலை 6ம் தேதி, 4 வயது பெண் குழந்தையை, சுஹைல் என்ற சோட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். குழந்தையின் தந்தை கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், சோட்டுவை 7ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் அலி, குற்றவாளி சோட்டுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வழக்கில், போலீசார் 31 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் அவதேஷ் பரத்வாஜ் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை