விளக்கு ஏற்றிவழிபாடு
திருமலை பிரசாதமான லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்ததற்கு தோஷம் நீங்க, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நேற்று மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றுமாறு திருமலை தேவஸ்தானம் அறிவுறுத்தியது. அவ்வாறு வீடுகளில் விளக்கு ஏற்றும்போது, 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரிக்குமாறும் கேட்டுக்கொண்டது. இதன்படி, பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.