உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு

லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு

மும்பை: மும்பை லீலாவதி மருத்துவமனையை நடத்தும் அறக்கட்டளை, முன்னாள் அறங்காவலர்கள் ரூ.1,200 கோடி அளவு நிதி மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லீலாவதி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை லீலாவதி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையில் ரூ.1,200 கோடி நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், அறக்கட்டளையின் முன்னாள் நிர்வாகிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிதி, மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.இதில் கடந்த 2024 ஜூலையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், மோசடி 2001ம் ஆண்டுக்கு முன்னரே நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த நிதியை மீட்பதற்காக அறக்கட்டளை நீதிமன்றத்தை நாடி உள்ளது. இதனிடையே கடந்த 7ம் தேதி மருத்துவமனை அறக்கட்டளை பாந்த்ரா போலீசிடமும், அமலாக்கத்துறை இயக்குநரகத்திலும் புதிதாக புகார் அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை