உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமின் மறுப்பு

மதுபான கொள்கை வழக்கு: கவிதாவிற்கு ஜாமின் மறுப்பு

புதுடில்லி: டில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை வழக்கில் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த கவிதாவிற்கு ஜாமின் வழங்க டில்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது.டில்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு விசாரித்து வருகிறது.இதில் ரூ. பல கோடி பரிவர்த்தனை பெற்றதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ மகளும் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேரந்தவருமான கவிதா மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை மார்ச் 15-ல் கைது செய்து திகார் சிறயைில் அடைத்தது.அவரது நீதிமன்ற காவல் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் வழங்கும்படி உயர் நீதிமன்றத்தில் இரு வேறு தேதிகளில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் கவிதாவிற்கு ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை டில்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை