உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கோர்ட் காவல் நீட்டிப்பு

மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் கோர்ட் காவல் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோரின் நீதிமன்ற காவல் பிப்.03-ம் தேதி வரை கோர்ட் நீட்டித்து உத்தரவிட்டது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 2022ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டதில் அரசுக்கு பெருமளவு நிதி இழப்பீடு ஏற்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து துணை நிலை கவர்னர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இந்த முறை கேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை விசாரணை நடத்தி கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.மற்றொரு ஆம் ஆத்மி கட்சி தலைவரான சஞ்சய் சிங்கும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். சிறப்பு நீதிபதி எம்.கே. நக்பால், இருவரின் நீதிமன்ற காவலை பிப்.03-ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Duruvesan
ஜன 21, 2024 07:37

சிசோடியா நல்லவன், அதை விட நல்லவன் கெஜ்ரி.


வெகுளி
ஜன 20, 2024 22:27

திருட்டு பயலுக வழக்கமாக சொல்வது போல இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைன்னு சொல்லிடுங்க...


Ramona
ஜன 20, 2024 21:21

அரசியல் கரங்களுக்கு வெளியிலும் போலீஸ் பாதுகாப்பு உள்ளேயும் பாதுகாப்பு , பென்சன் , லஞ்சம், சம்பளம், கிம்பளம் ,அடுக்கிக்கொண்டே போகலாம் , இவங்களுக்கு இருக்கும் பண பசி எப்போ ஒழியுமோ ,


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை